சென்னையும் எஸ்.ராமகிருஷ்ணனும்

எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்

எஸ்.ராமகிருஷ்ணன் சென்னையும் நானும் என்ற தலைப்பில் தொடர்ச்சியாகப் பேச ஓர் ஆவணப்படத்தன்மையுடன் அமைந்த யூடியூப் காணொளித்தொடர் இதுவரை பத்து பகுதிகள் வெளியாகியிருக்கின்றன

 

திடீரென்று யூடியூப் பிரபலமாகிவிட்டிருக்கிறது. அதை பலபேர் பார்க்கிறார்கள் – பணமும் வருகிறது. ஆனால் பார்க்கத்தக்க அறிவுத்தகுதி, நம்பகத்தன்மை கொண்ட யூடியூப் பதிவுகள் மிகமிகமிகக் குறைவு. தமிழ் மக்களுக்கு என்றுமே ஆர்வம் மிக்க சினிமா அரட்டை, முதிரா சினிமா விமர்சனங்கள்தான் மிகுதி.அதற்குத்தான் அதிகம் பார்வையாளர்கள். ஆகவே அதிக பணம். அதனால் பெரும்பாலான எழுத்தாளர்களும் சினிமா விமர்சகர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். சினிமாவை விட்டால் அசட்டுத்தனமான மாயாஜால ஆன்மிகம். மாயாஜால மாற்றுமருத்துவம். அதற்கப்பால் கொஞ்சம் இருப்பது அதைவிட கீழான மாயாஜால வரலாற்றாய்வு, இனப்பெருமை மொழிப்பெருமை சாதிப்பெருமைப் பீராய்தல்கள்.

 

எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த பதிவுத்தொடர் கொஞ்சமே அறிந்த, ஆர்வத்தைத் தூண்டும் செய்திகளால் ஆனது. அவருடைய தனிப்பட்ட அலைச்சல்கள் தேடல்களுடன் சென்னையை காட்ட முயல்கிறது. ஏற்கனவே  எஸ்.முத்தையா போன்றவர்கள் சென்னையைப் பற்றி ஆங்கிலத்தில் நிறைய எழுதியிருக்கிறார்கள். இணையத்திலேயே செய்திகள் உள்ளன. ஆனால் இந்தப்பதிவு எஸ்.ராமகிருஷ்ணன் கண்ட சென்னை. அதனால் ஆர்வமூட்டுவது அறுபடாத ஒழுக்கோடு செய்திகளைச் சொல்லிச் செல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்

 

சென்னையும் நானும்- 2

சென்னையும் நானும் 3

சென்னையும் நானும் 4

சென்னையும் நானும் 5

சென்னையும் நானும் 6

சென்னையும் நானும் 7

சென்னையும் நானும் 8

சென்னையும் நானும் 9

சென்னையும் நானும் 10

 

முந்தைய கட்டுரைவெண்முரசு புதுவைக் கூடுகை
அடுத்த கட்டுரையா தேவி! – கடிதங்கள்-3