திராவிடவேதம்-இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெ,

// அதன்பின் உரைகள். வைணவ உரைகள் அனைத்தையுமே இணையத்தில் ஏற்றுவது ஒரு பெரும் பணி. ஒரு கோயில் கட்டுவது போன்றது. இன்று சிலரேனும் முழுமூச்சுடன் செய்தாகவேண்டியது //

திருவாய்மொழி ஈடு வியாக்கியானம் முழுவதும் இணையத்தில் உள்ளது – http://www.tamilvu.org/library/l4210/html/l4210tin.htm. இதே தளத்தில் கம்பராமாயண விரிவுரை (கோவை கம்பன் கழகம்) முழுவதும் உள்ளது – http://www.tamilvu.org/library/l3700/html/l3700ind.htm

தமிழக அரசு கல்வி அமைப்பு ஒன்றே இதைச் செய்துள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால், இந்த தளத்தை யுனிகோட் எழுத்துருவில் செய்யாமல், ஒரு தனிப்பட்ட ஃபாண்டில் செய்து வைத்திருக்கிறார்கள்.. தளமும் சரியாக index செய்யப் படாததால் கூகிள் தேடுதல்களிலும் கிடைக்காது.. தற்செயலாகத் தடுக்கி விழுந்து கண்டுபிடித்தேன்.

அன்புடன்,
ஜடாயு

பி.கு: http://www.dravidaveda.org தளத்திற்குச் சென்று பார்த்தேன். முதல் பக்கத்தில் உள்ள “பெரியாழ்வாரின் பட்டினம்” என்ற கட்டுரை தமிழ்ஹிந்து தளத்தில் எஸ்.ஜெயலக்ஷ்மி என்பவர் முன்பு எழுதியது – http://www.tamilhindu.com/2009/03/periyazhvaar-pattinam/ அப்படியே இத்தளத்தில் பதிக்கப் பட்டுள்ளது. பின்பு இங்கு வந்து பார்த்தால் செங்கோட்டை ஸ்ரீராம் கடிதம்!

முந்தைய கட்டுரைதிற்பரப்பு
அடுத்த கட்டுரைதிராவிடவேதம்-கடிதங்கள்