நான் இந்த உலகத்திற்குக் கொடுப்பதற்கு எதுவுமில்லை என்பது பொதுவாக அறியப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். நான் தொடங்கி, இவ்வளவு தொலைவு முன்னேறி வந்திருக்கும் இந்தப் பணியின் நிறைவுக்காகவே என் இறுதி விலையையும் கொடுப்பேன் என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருக்கலாம். எனினும், என்னிடம் கொடுப்பதற்கு அதிகமில்லை. என் சேமிப்புகள் அனைத்தும் இந்தப் பணியில் கரைந்துவிட்டன. பிறவழிகளில் வந்த என் வருமானங்களும் இந்த நோக்கத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டன. இதனாலெல்லாம் நான் சிறிதும் வருத்தப்படவில்லை.
கிசாரிமோகன் கங்கூலியின் மகாபாரத ஆங்கில மொழியாக்கத்தின் பதிப்பாளரின் முன்னுரைக்குறிப்பு. ஓரு வாழ்க்கை அறிவிக்கைபோல, ஒர் அறைகூவல்போல ஒலிக்கிறது இது