வஞ்சியில் அன்னைக்கு கோவில் கட்டி பூஜைகள் நடந்து முடிந்த பொழுது அன்னை கடலைநோக்கினாள் , புலையர் குல கன்னி வழி கலைமான் மீதேறி அன்னை வருகிறாள். மீண்டும் அன்னையின் பிறப்பு. அவள் மீண்டும் மீண்டும் எங்கோ பிறந்து கொண்டே இருக்கிறாள். அன்னைகளின் முழுக்கதையையும் அக்கன்னி தன் அகக்கண்வழி காண்கிறாள். அவள் பூப்படைந்து , முதல் ரத்தம் வெளிவருந்து , முதற்கரு அவளுள் சூல்கொள்ள விளைவதன் வழி தெய்வமொன்று பிறக்கின்றது.