உரைகள்- கடிதம்

 

அன்புள்ள ஜெ,

 

சமீபத்தில் தொடர்ச்சியாக நிறைய உரைகளை ஆற்றியிருக்கிறீர்கள். நான் உரைகளை விரும்பிக் கேட்பவன்.பொதுவாகவே யூடியூப் எனக்கு ஒரு தனி உலகம்போல. பழையபாடல்கள் கேட்பேன். ஒரு கட்டத்தில் பாடல்கள் சலிக்கும்போது உரைகள். ஆரம்பத்தில் புகழ்பெற்ற உரைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் பேச்சாளர்களின் உரைகள் சீக்கிரமே சலிப்புதட்ட ஆரம்பித்துவிட்டன. அவற்றில் சாரமில்லை என்பதோடு அவர்கள் அதை ஆத்மார்த்தமாகவும் சொல்லவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆகவே இப்போதெல்லாம் இலக்கிய உரைகளை கேட்கிறேன். பல உரைகள் மொக்கையாக இருந்தாலும் அவ்வப்போது மிக ஒரிஜினலான உரைகளைக் கேட்கமுடிகிறது

 

உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கிறேன். ஆனால் காதால் கேட்பதுபோல அத்தனை நெருக்கமாக அவை எனக்கு இல்லை. ஏனென்றால் அவற்றிலுள்ள அச்சுமொழி, தியரிமொழி எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. மேலும் எலெக்ட்ரிக் டிரெயினில் இந்த உரைகளைக் கேட்டுக்கொண்டே செல்ல முடிகிறது. இவை நமக்காகவே சொல்வதைப்போல இருக்கிறது. நிறைய உரைகள் இருக்கின்றன. ஆனால் இன்னமும்கூட நிறைய உரைகள் தேவை. அப்போதுதான் ஒரு முழுமையான அறிமுகம் எல்லா திசைகளிலிருந்தும் கிடைக்க முடியும். சமீபத்தில் நீங்கள் மலேசியாவில் ஆற்றிய உரைகள் எல்லாமே அருமையான இலக்கிய அறிமுகம் அளிப்பவையாக இருந்தன. அதேபோல விஷ்ணுபுரம் விருதுவிழாவில் ஆற்றிய உரையும் ஆழமானது.

 

உரைகளுக்கு நன்றி

 

எம்.ஆர்.பாலகிருஷ்ணன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைஒரு வாசிப்பனுபவம்
அடுத்த கட்டுரைமகாபாரத கருத்தரங்கு