இரண்டு குறுங்கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

 

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி அவர்களை கௌதம் ஜெயசாரதி என்பவர் போற்றி எழுதியதை பார்த்தேன். அதில் ஒரு வரி “வேட்டியணிந்த வெண்முரசு”. வேடிக்கையாக இருந்தது. உங்கள் கவனத்திற்காக

 

ஜெயக்குமார்

 

அன்புள்ள ஜெயக்குமார்

 

பெரிய குண்டெல்லாம் இல்லை.கொஞ்சம் பூசினாற்போல் இருக்கிறார், அவ்வளவுதான்.  அதற்காக அப்படியெல்லாம் சொல்வது சரியல்ல என்றுதான் நினைக்கிறேன்

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

 

மனுஷ்யபுத்திரனின் நட்புத்துரோகக் கவிதைகளைப் பற்றி ஒரு தனி ஆய்வுக்கட்டுரையை நீங்கள் எழுதலாம் என நினைக்கிறேன். ஓரிரு வரி குறிப்புகளுடன் நிறுத்திவிடாமல். என் கோரிக்கை

 

சரவணக்குமார்.

 

அன்புள்ள சரவணக்குமார்

 

இது எனக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி. நண்பர் அனுப்பியது.

 

இறைவா, உன்னிடம் ஒன்றே ஒன்றுதான் கேட்கிறேன். கைவிடப்படாத, களைப்பற்ற, துரோகத்திற்குள்ளாகாத ஒரெயொரு நாளையாவது நீ மனுஷ்யபுத்திரனுக்குக் கொடுக்கக்கூடாதா?”

 

என்னுடைய பிரார்த்தனையும் அதுவே

 

ஜெ

முந்தைய கட்டுரைசிறுகதைகளின் நிலவெளி -முத்துக்குமார்
அடுத்த கட்டுரைஜே.ஜே.சிலகுறிப்புகள், திறனாய்வு, ரசனை