‘அரசன் பாரதம்’ நிறைவு விழா

 

முழுமகாபாரதம் நிறைவு

 

அருட்செல்வப் பேரரசன் அவர்கள் கிசாரிமோகன் கங்கூலியின் மகாபாரதத்தை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டு முடித்திருக்கிறார். முழுமகாபாரதம் என்னும் இணையதளத்தில் ஏறத்தாழ ஏழாண்டுக்காலம் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் இந்த மொழியாக்கம் வெளியாகியிருக்கிறது. தமிழில் இது ஒரு தனிப்பெரும் சாதனை. தன் செயலில் முழுதளிப்பும் இடைவிடா ஊக்கமும் கொண்ட ஒருவரால் மட்டுமே செய்து முடிக்க இயல்வதான பெரும்பணி இது. அத்தகையோர் இன்று அரிதானவர்கள்

 

சாதனையாளரான அருட்செல்வப் பேரரசன் அவர்களுக்கு ஒரு பாராட்டுவிழாவை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கோவையில் வரும் பெப்ருவரி 1 அன்று ஏற்பாடு செய்திருக்கிறோம். அழைப்பிதழ் விரைவில் வெளியாகும். வாய்ப்புள்ள நண்பர்கள் கோவைக்கு வரவேண்டும் என அழைக்கிறேன்

 

ஜெ

 

முழு மஹாபாரதம் -அரசன் – இணையதளம்

 

 


கங்கூலி பாரதம் தமிழில்
அருட்செல்வப் பேரரசன் சந்திப்பு
விழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு