புதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி

 

அன்பிற்கினிய ஜெ,

 

வணக்கம் .

 

நலம் , உங்கள் நலனை விழைகிறேன்

 

புதுவை வெண்முரசு கூடுகை தனது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது .உரையாடல் தளத்திலிருந்து நீண்ட நாள் இலக்கான “விவாதம்” என்கிற தளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கான முதல் முயற்சியாக “நீலம்” குறித்த உரையாடலை முழுமையாக ஒருவரே தொடர்ந்து நிகழ்த்துவதன் மூலம் அதை அடைய முயல்கிறோம் .

 

கடலூர் சீனு ‘நீலம்’ குறித்த பன்னிரண்டு அமர்வை இந்த வருடம் முழுவதுமாக ஒவ்வொரு கூடுகையிலும் அவரே உரையாற்றுவார் , பின்னர் கூடுகை உறுப்பினர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தை முன்வைப்பார்கள்.

 

புதுவை கூடுகை பற்றிய அறிவிப்பை தங்களின் தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறீர்கள் . புதுவை கூடுகையின் சார்பில் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . ஜனவரி மாதத்தில் கூட இருக்கும் 34 வது புதுவை வெண்முரசு கூடுகை 25.01.2020 சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு ஒருங்கியுள்ளது. அது பற்றிய தகவலை இத்துடன் இணைத்துள்ளேன் . வெளியிட்டு உதவும்படி வேண்டுகிறேன்.

 

நன்றி,

 

ஆழ்ந்த நட்புடன்

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

புதுவை

 

 

அன்புள்ள நண்பர்களே ,

 

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் 34 வது கூடுகை 25.01 .2020 சனிக்கிழமை அன்று மாலை 5:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

 

கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 4 “நீலம்” .பகுதி ஒன்று “திருப்பல்லாண்டு , மணிநீல மலர்க்கடம்பு , முகிழ்முலை கனிதல் ” ,பதிவுகள் குறித்து நண்பர் கடலூர் சீனு உரையாற்றுவார் , விருந்தினராக நண்பர் ஈரோடு கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்

 

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்,

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001
தொடர்பிற்கு:-
9943951908 ; 9843010306

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52
அடுத்த கட்டுரைசத்- தர்சன்- ஆனந்தகுமார்