கிஸாரி மோகன் கங்குலியின் முழுமகாபாரதத்தையும் நாள் தோறும் என மொழியாக்கம் செய்து இணையத்தில் வெளியிடும் பணியை ஜனவரி 9 2013ல் தொடங்கினார் அருட்செல்வப் பேரரசன். அப்பெரும்பணியை இப்போது முடித்திருக்கிறார். சோர்வில்லாமல் தொடர்ச்சியாக இதைச் செய்து முடித்திருக்கிறார். எளிமையான நேரடி மொழி. எவரும் வாசிக்கும் படியான ஒழுக்குள்ள உரைநடை. தமிழுக்கு இது ஓர் அருங்கொடை.
விரைவிலேயே இது நூல் வடிவில் அமேசானிலும் அச்சிலும் வெளிவரவேண்டும். அருட்செல்வப் பேரரசன் அவர்களை மனமாரத் தழுவிக்கொள்கிறேன்