புத்தாண்டு, சத்- தர்சன் — கடிதங்கள்

புத்தாண்டு

ஜெ,

ஆனைகட்டி அருகே உள்ள கோட்த்துரா, அகலி, நர்சிமுக்கு, உற்றூக்குளி போன்ற அட்டபாடி பகுதிகளில் கடந்த மழை காலத்தில் சுற்றி இருக்கிறேன். அப்படியே உள் செல்ல செல்ல ஆள் அதிகம் இல்லா பகுதிகள் தன்னின் உண்மையான உள் அமைதியின் ஒரு இடத்திற்கு இயல்பாக கொண்டு சென்று விடும்.

கலையையும், இயற்கை சார்ந்து தன்னோடு தான் இருத்தலையும் கொண்ட சத்-தர்ஷன் அழகு கவிதை. என் ஆசையின் நீட்சியாக மகிழ்ந்து கொண்டேன். வரும் அனைவருக்கும்,அங்கு இருக்கும் அந்த தினங்களில் , அமைதியை -இருத்தலின் ஆனந்தத்தை அளிக்கும் அவரின் இந்த செயல்பாடுக்கு வாழ்த்துகள்!!

அன்புடன்,

லிங்கராஜ்

***

அன்புள்ள ஜெ

புத்தாண்டுக் கொண்டாட்டங்களை இணையத்தில் வாசித்தேன். உங்களுடன் அப்போது இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பேரில் குடித்து கும்மாளமிட்டு மறுநாள் தன்னைத்தானே சபித்துக்கொள்வதைத்தான் கண்டிருக்கிறேன்.கேட்டால் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். அந்த ஒருநாள் மட்டும் அப்படி ஆட்டம்போட்டால் ஆயிற்றா என்று நினைப்பேன்.

வருடம் முழுக்க நீளும் ஒரு மகிழ்ச்சியானநிலையே நமக்கு தேவை. அதற்கான மனநிலையை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும். சத்- தர்சன் இடமும் சூழலும் அழகாக இருந்தன. அங்கே நீங்கள் நண்பர்களுடன் இருந்ததை எழுதியிருந்ததும் சிறப்பாக இருந்தது. மகிழ்ச்சியான சிரிப்பும் இயற்கையும் நண்பர்களும் கூடவே கொஞ்சம் இலக்கியமும் ஆன்மிகமும் அதுதானே ஒரு இலட்சியக்கலவை. வாழ்த்துக்கள்

செந்தில்குமார்

***

சத்-தர்சன் இணைய தளம்

 www.satdarshan.org

[email protected]

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 45
அடுத்த கட்டுரைசீரியல் கில்லர்கள் -கடிதம்