விழா கடிதம் – ரவிச்சந்திரன்

செந்தில்

விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்

அன்புள்ள ஜெ.

விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஒரு சிறு பிசகு கூட இல்லை. அத்தனை பேரும் ஏதோ ஒருவகையில் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்பட்டார்கள். நான் ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளன். இப்படி ஒரு பெரிய விழாவை ஒருங்கிணைத்து இந்த அளவில் நடத்துவது பெரிய பணி. இதைச்செய்வதைப்பற்றி எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.

தொழில்விஷயங்களில் ஏற்பாடுசெய்யும் அரங்குகளில்கூட அடிக்கடி சிக்கல்கள் வருகின்றன. ஆனால் இலக்கிய விஷயங்களை இப்படி அற்புதமாக ஒருங்கிணைத்த உங்கள் டீம் பாராட்டுக்குரியது. நான் டீ தயாராகியிருக்கிறதா, சாப்பாடு போதாமலாகிறதா என்பதை எல்லாம்தான் பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லாமே கச்சிதம்.

ராம்குமார்

இப்படிப்பட்ட விழாக்களில் அடிக்கடி நடக்கும் இரண்டு விஷயங்கள். நாம் ஒருவருக்கு ஏற்பாடு செய்த அறையில் இன்னொருவர் குடியேற்றப்பட்டிருப்பார். நம் டீமிலேயே ஒருவர் அதைச் செய்திருப்பார். விருந்தினர் பெட்டிபடுக்கைகளுடன் காத்திருப்பார். இன்னொன்று, ஒருவரை வரவேற்க டீமில் ஒருவரை ஏற்பாடு செய்திருப்போம். அவர் மறந்துபோயிருப்பார்.அல்லது அவசர வேலை வந்திருக்கும். அந்தமாதிரி சூழல்களில் விருந்தினர்கள் அதை தனிப்பட்ட அவமதிப்பாக எடுத்துக்கொள்வார்கள். அதிலும் அவர்கள் தங்களுடன் பெண்களை அழைத்துவந்திருந்தால் மிகப்பெரிய ego  சிக்கல் வந்துவிடும்.

பயண முன்பதிவுகள் இன்னொரு பிரச்சினை. எல்லா பிரச்சினைகளையும் முன்னரே ஊகித்து இரண்டாம் ஏற்பாடு செய்திருக்கவேண்டும். ஒரு முனையில் இருந்து ஆணைகளை பெறும்படி அமைக்கப்படவேண்டும். எல்லாமே விஷ்ணுபுரம் விழாவில் மிகமிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. உங்கள் டீமுக்கு இது ஒரு வெற்றி. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்

எஸ்.ரவிச்சந்திரன்

***

விஜய் சூரியன்

அன்புள்ள ரவிச்சந்திரன்,

இந்தக் குழு இயல்பாக உருவாகி வந்தது. விழாவுக்கு ஆறுமாதம் முன்னரே ஏற்பாடுகள் தொடங்கிவிட்டிருந்தன. முதன்மையானவர் செந்தில்குமார். அவர்தான் அந்த ஒருமுனை. இன்னொருவர் ராம்குமார் அவர் இன்னொரு முனை. அவருடனும் ராம்குமாருடனும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவர் இணைந்திருந்தார்கள்.

விஜய்சூரியன் – உணவு, அரங்கு ஏற்பாடுகள். மீனாம்பிகை – பயணப்பதிவு, நரேந்திரன், அரங்கசாமி – வரவேற்பு, ஸ்ரீனிவாசன் – தங்குமிடம் ஒருக்குதல், செல்வேந்திரன் – செய்தித்தொடர்புகள்,. ராஜகோபாலன் – அரங்க ஒருங்கிணைப்பு. சுசீல்குமார், ஷாகுல் ஹமீது, காளிபிரசாத், யோகேஸ்வரன் ராமநாதன், கதிர் முருகன் என பலருடைய பங்களிப்பும் இருந்தது. விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள்.

நீங்கள் சொல்வதுபோல ஒரு வெற்றிகரமான குழுதான். வெற்றிகரமான குழு ஒரு கட்டுப்பாட்டால் அவ்வாறு அமைகிறது என்று சொல்வோம். பொதுவான இலக்கு அதைவிட முக்கியமானது என நினைக்கிறேன். இதை அமைத்தவர்கள் எவருக்கும் இதில் தனிப்பட்ட லாபம் என ஏதுமில்லை. அவர்கள் செய்யும் தொழிலில் இவ்வுழைப்பிற்கு பல்லாயிரம் ரூபாய் மதிப்புண்டு. அவர்கள் நான் முன்வைக்கும் ஒரு கனவைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அதுவே அவர்களுக்கான தூண்டுதலாகிறது.

அவர்கள் எழுத்தாளர்கள் கூட அல்ல. வாசகர்கள் மட்டுமே. வாசகர்களிடம் எந்த எழுத்தாளனும் ஏதோ ஒரு வகையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறான். இவர்களைப்போல செயல்படும் வாசகர்களுக்கு பலமடங்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். நானும்தான்.

நன்றி

ஜெ

***
விழா 2019 ஜெயமோகன்
விழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்
விழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்
விழா கடிதங்கள்- நாராயணசாமி,மதி
விழா – வ.சௌந்தரராஜன்
விழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்
விழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்
விழா பதிவு: கொள்ளு நதீம்
விழா கடிதங்கள், ரங்கராஜன்,செல்வக்குமார்
விழா- கடிதங்கள்- விக்ரம், சந்திரசேகரன்
விழா கடிதம்- காளிப்பிரசாத்,சிவக்குமார்
விழா கடிதம் – நினேஷ்குமார்
விழா- கடிதங்கள்
விழா கடிதம்- பாலாஜி பிருத்விராஜ்,ஜெகதீஷ்
விழா- லோகமாதேவி
விழா – ஆனந்தகுமார்
விழா ,கடிதம்-கதிர்முருகன்
விழா-சுனீல் கிருஷ்ணன்
விழா- கடிதங்கள்- சுபா, யோகா
முந்தைய கட்டுரைவிழா – வ.சௌந்தரராஜன்
அடுத்த கட்டுரைகோட்டயம் ஓவியங்கள்.