அருண்மொழியின் உரை

அருண்மொழி மலேசியாவில் கெடா அருகே கூலிம் ஊரில் பிரம்மவித்யாரண்யத்தில் நடந்த நவீன இலக்கிய முகாமில்  ஆற்றிய உரை. கல்;லூரிக் காலகட்டத்திற்குப் பின் இப்போதுதான் மேடையில் பேசுகிறாள். நடுவே ஆஸ்திரேலியாவில் நூலை ‘எடிட்டிங்’ செய்வதைப்பற்றி ஒரு பதினைந்துநிமிடம் பேசியிருக்கிறாள். உரையை எழுதி திரும்ப எழுதி தயாரிக்க இரண்டுநாட்கள் ஆகியது என்று சொன்னாள். அதற்கான நேரம் இப்போது வேலையை உதறிவிட்டபின்னரே வாய்த்திருக்கிறது.

உரையாற்றும்போது நான் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டாள். ஆகவே வெளியே போய்விட்டேன். உரை வலையேற்றம் செய்யப்பட்டபோது ஊட்டியில் வைத்து உரையைப் பார்த்தேன். நன்றாகவே இருந்தது. முதல் பத்துநிமிடங்களுக்குப்பின் நாவல் பற்றியநினைவு அவளை இழுத்துக்கொண்டுச் சென்றுவிட்டதைக் காணமுடிந்தது.

முந்தைய கட்டுரைவிழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்
அடுத்த கட்டுரைகலைகளைப் பிரித்துப்பார்த்தல்