அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020

வணக்கம்,

அரூ அறிவியல் சிறுகதைகள் 2019″ வம்சி பதிப்பக வெளியீடாகத் தற்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகியுள்ளது. தேர்வான பத்து கதைகளும் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சுனில் கிருஷ்ணனின் முன்னுரைகளுடன் இடம்பெற்றுள்ளன. இதனைச் சாத்தியப்படுத்திய நண்பர் சரவணனுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்குத் தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும். அரூவின் ஏப்ரல் இதழில் வெற்றிபெறும் கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கதைகளும் வெளியாகும். இக்கதைகள் அடுத்த ஆண்டு புத்தக வடிவிலும் வெளியாகும்.

மேலும் விவரங்களுக்கு:

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி

தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு மிக்க நன்றி!

அன்புடன்,

அரூ நண்பர்கள்.

முந்தைய கட்டுரைபுத்தகக் கண்காட்சி – கருத்துரிமை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47