விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. இப்பத்தாண்டுகளில் இதில் வாசகர்களாகப் பங்கெடுத்தவர்கள் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக எழுந்திருக்கின்றனர். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களாக வளர்ந்திருக்கின்றனர். பலர் தாங்களே இலக்கிய அமைப்புக்களை நிறுவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இப்பத்தாண்டு நிறைவை ஒட்டி நம் நண்பர்கள் எழுதிய பத்து நூல்களின் வெளியீட்டுவிழா ஒன்றை நடத்தலாம் என எண்ணினோம். இதில் இந்த ஆண்டு தங்கள் முதல்நூலை வெளியிடும் நண்பர்கள் பத்துபேரின் நூல்களை அறிமுகம் செய்வது எங்கள் நோக்கம். முதல் சிறுகதைத் தொகுதிகள், மொழியாக்க நூல்கள் இதில் உள்ளன

நம் நண்பர்களில் ஏற்கனவே பல நூல்களை வெளியிட்டுவிட்டவர்கள், தமிழகத்திலும் வெளியிலும் அறிமுகமானவர்கள், இந்நிகழ்ச்சியில் நூல்களை வெளியிடுபவர்களாகவும் சொற்பொழிவாளர்களாகவும் கலந்துகொள்கிறார்கள். விழா விருந்தினர்கள் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

ஜனவரி 10 அன்று சென்னையில் இவ்விழா நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கிய நாள் முதல் இதில் இணைந்துள்ள நண்பர்கள் பலர் உள்ளனர். அனைவரும் இதில் கலந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறேன். இளம் வாசகர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். விரிவான அழைப்பிதழ் பிறகு.

தொடர்புக்கு ராஜகோபால் – 9940235558 சௌந்தர் 9952965505

***

முந்தைய கட்டுரை‘விழிப்பு’- ஜானவி பரூவா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 24