இன்று விஷ்ணுபுரம் விருது விழா

விஷ்ணுபுரம் விருதுவிழா இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது. காலையிலிருந்தே கருத்தரங்கு தொடங்கும். பல்வேறுவகைப்பட்ட படைப்பாளிகளை வாசகர்கள் சந்திக்கும் அமர்வுகள் தொடர்ச்சியாக ஒருங்கமைக்கப்பட்டுள்ளன. இடம் ராஜஸ்தானி சங் அரங்கு. மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

அபி முந்தையநாளே வந்துவிடுவார். அவரை சந்திக்க விரும்புபவர்கள் சந்திக்கலாம். இரவில் சந்திப்புகள் முடிந்தபின் வழக்கம்போல இலக்கிய வினாடிவினா. குவிஸ் செந்தில் நடத்துகிறார்.

 

மறுநாள் காலை 9 மணிமுதல் சந்திப்புகள் நடைபெறும். அபி மற்றும் சிறப்பு விருந்தினர்களுடனான உரையாடல்கள் நிகழும். மதியம் அரங்கு நிறைவுறும். மாலையில் அதே அரங்கில் விருது வழங்கும் விழா. நண்பர் கே.பி.வினோத் இயக்கிய அபியைப்பற்றிய ஆவணப்படமான  ‘அந்தரநடை’ ஐந்து முப்பதுக்கு. திரையிடப்படும். அதன்பின் விருதுவிழா.

 

இந்த அரங்கமேடையில் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படும். குக்கூ- தன்னறம் – நூற்பு அமைப்பின் கைவினைப்பொருட்களும் விற்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம்