விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் -கடிதங்கள்

‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்

அன்புள்ள ஜெ

அபி ஆவணப்படத்தின் முன்னோட்டம் அழகாக இருந்தது. நல்ல ஒளிப்பதிவு, நல்ல இசை, நல்ல இயக்கம் ஆகியவற்றைக் காணமுடிந்தது. இங்கே ஆவணப்படங்களுக்கு இடமே இல்லை. உண்மையில் நல்ல ஆவணப்படங்களைக்கூட மக்கள் பார்ப்பதில்லை. எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்களுக்கு ஒரு இரண்டாயிரம்பேர் இருந்தாலே அதிகம்.

ஆனால் இவையெல்லாமே பெரிய மதிப்பு பெறும் காலம் வரும் என்று நினைக்கிறேன். ஜெயகாந்தனின் ஆவணப்படத்தை இப்போது பார்க்கையில் அவருடைய உடல்மொழியை ஆவலுடன் பார்க்கமுடிகிறது. அதே சமயம் சுந்தர ராமசாமி பற்றிய ஆவணப்படத்தில் அவரை ஆங்காங்கே நிற்கவைத்துச் செயற்கையாக எடுத்திருந்தார்கள்.

உண்மையில் மேலைநாட்டு ஆவணப்படங்களில் சிறந்த அம்சம் என்னவென்றால் ஏற்கனவே எடுக்கப்பட்ட பல பதிவுகள். ஆனால் இங்கே எழுத்தாளர்களுக்கெல்லாம் நல்ல புகைப்படங்கள் கிடைப்பதே குறைவு. ஆகவே அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பதிவுசெய்வது மட்டுமே செய்யக்கூடியது

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் மிகச்சிறந்த பணியை ஆற்றுகின்றன. விருதுபெறாத மூத்தபடைப்பாளிகளைக்கூட ஆவணப்படம் எடுக்கலாம் என நினைக்கிறேன்

சந்தோஷ்

***

அன்புள்ள ஜெ

அபி ஆவணப்பட முன்னோட்டம் அருமையானதாக இருந்தது. இசை மென்மையானது. அபியைப்போல சமூகக்கருத்துக்கள் அரசியல் கருத்துக்கள் ஏதும் சொல்லாத உள்ளடங்கிய ஒரு கவிஞரின் ஆவணப்படத்தை எப்படி எடுப்பது என்பது பெரிய சவால்தான். வினோத் முந்தைய இரு ஆவணப்படங்களைப்போலவே சிறப்பாக எடுத்திருப்பார் என நம்புகிறேன்

ஜெயராமன்

விஷ்ணுபுரம் விருது ஆவணப்படங்கள்

ஞானக்கூத்தன் ஆவணப்படம் இலைமேல் எழுத்து

இயக்கம் கே.பி,வினோத்

 

தேவதச்சன் ஆவணப்படம் நிசப்தத்தின் சப்தம்

இயக்கம் சரவணவேல்

 

வண்ணதாசன் ஆவணப்படம் நதியின்பாடல்

இயக்கம் செல்வேந்திரன்

 

சீ முத்துசாமி ஆவணப்படம் ரப்பர்விதைகளுடன் விளையாடும் கலைஞன்

இயக்கம் ம.நவீன்

பாட்டும் தொகையும் ராஜ் கௌதமன் ஆவணப்படம்

இயக்கம் கே பி வினோத்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 18
அடுத்த கட்டுரைஜெயமோகனுக்கு மலேசிய விருது -நவீன்