இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்

 

 

கவிஞர் அபிக்கு 2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவதை ஒட்டி வெளியிடப்படும் விமர்சன நூல் இரவிலிநெடுயுகம். விஷ்ணுபுரம் இலக்கியவட்ட வெளியீடு இது

 

 

முன்னுரை

கவிஞர் அபி அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுவதை ஒட்டி இந்த நூல் வெளியிடப்படுகிறது.

அபி தமிழ்க்கவிதையில் அருவக்கவிதையின் முன்னோடி என்ற கூறலாம். அகவயமான உணர்வுகளையும் தரிசனங்களையும் புறவயக் காட்சித்தர்க்கம் அற்ற படிமங்களினூடாக வெளிப்படுத்திய கவிஞர் அவர்.

இலக்கிய முன்னோடிகளை மதிப்புறுத்தும் நோக்குடன் 2010 முதல் வழங்கப்படும் விஷ்ணுபுரம் விருது இதுவரை ஆ.மாதவன் , பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன்,தேவதச்சன், வண்ணதாசன், சீ .முத்துசாமி,  பேரா.ராஜ்கௌதமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெயமோகன்

 

‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14
அடுத்த கட்டுரைபிரமிள் – கடிதங்கள்