விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்

 

அன்புள்ள நண்பர்களுக்கு

கவிஞர் அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா இவ்வாண்டு டிசம்பர் 27, 28 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. வழக்கம்போல முதல் நாள், 27-12-2019 வெள்ளிக்கிழமை காலைமுதல் எழுத்தாளர் சந்திப்புகள் நிகழும். மறுநாள் மாலையில் விருதுவிழா

இவ்வாண்டு மலையாளக்கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை அஸாமியக் கவிஞர் ஜான்னவி பருவா ஆகியோர் விருந்தினர்களாக விருதுவிழாவில் கலந்துகொள்கிறார்கள்.கே.என்.செந்தில், இசை,அமிதம் சூரியா, வெண்பா கீதாயன், சுரேஷ்குமார இந்திரஜித், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி ரவி சுப்ரமணியன் ஆகியோரின் படைப்புலகு குறித்த விவாதங்கள் நிகழவிருக்கின்றன.

இவ்வாண்டும் இலக்கியநண்பர்கள் கலந்துகொண்டு விழாவையும் கருத்தரங்கையும் சிறப்பிக்கவேண்டும் என விரும்புகிறேன்

ஜெயமோகன்

 

 

 

 

விஷ்ணுபுரம் விருது விழாஅறிவிப்பு

விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருபவர்களுக்கு…

விஷ்ணுபுரம் விருதுவிழா விருந்தினர்கள்

 

முந்தைய கட்டுரைஅபியின் அருவக் கவியுலகு-3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11