ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு

 

பெண்ணெல்லாம் பேய்ச்சி ஆகும் கதை என ஒருவரியில் சொல்லலாம். நாவல் 1981, 1999, 2019 என மூன்று காலகட்டங்களில் மாறி மாறி நிகழ்கிறது. இக்காலகட்டங்களுக்கு அப்பால் நினைவுகளின் ஊடாக இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பாக பயணித்து மலேசிய வரலாற்றின் கோட்டுச் சித்திரத்தை அளிக்கிறது. மலேசியாவின் லுனாஸ் எனும் சிற்றூரில் எண்பதுகளில் பல தமிழர்களின் உயிரைக்குடித்த  சாராய உயிரிழப்பு தான் நாவலின் களம்.

 

ரப்பரில் இருந்து செம்பனைக்கு மலேசியா மாறிய ஒரு காலகட்டத்தில் நாவல் நிகழ்கிறது. செம்பனை வரத் தொடங்கி முழு பரப்பையும் கைக்கொண்ட ஒரு சித்திரத்தையும் நாவலில் காண முடிகிறது. காலனிய காலம், ஜப்பானியர்களின் காலம், சுதந்திர மலேசியா, கம்யுனிஸ்ட் எழுச்சி என வெவ்வேறு காலகட்டத்து வரலாற்று சித்திரங்களை சன்னமாக நாவல் சொல்லிச் செல்கிறது. பெரும்பாலும் மலேசியத் தோட்டம் மற்றும் கம்பத்தில் நிகழும் நாவல், ஒரு பகுதி மட்டும் தமிழகத்தில் நிகழ்கிறது.

 

ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவல் பற்றி சுனீல் கிருஷ்ணனின் விமர்சனம்

பேய்ச்சி: முதல் வாசிப்பு

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10
அடுத்த கட்டுரை‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்