காந்தியின் உணவு பரிந்துரை

 

ஆசிரியருக்கு,

 

காந்தியின் உணவுப் பழக்க பரிந்துரை மிக சுவாரஸ்யமானது, கூறிய அவதானிப்புகளை கொண்டது. சமீபத்தில் கச்சித்தமான எளிமையான மொழியில் எழுதப்பட்ட  இவ்வளவு வசீகரமான ஒரு கட்டுரையை நான் படித்ததில்லை, ஆகவே உடனே மொழி பெயர்த்தேன். அதை கீழே கொடுத்துள்ளேன் :

 

 

 

உணவும் உணவுத் திட்டமும்காந்தி (http://www.gandhi-manibhavan.org/diet_pro.htm)

 

மனிதன் காற்றும் நீருமின்றி வாழ இயலாது என்றாலும், உடலுக்கு ஊட்டமளிப்பது உணவேயாகும். எனவேதான் ‘உணவே வாழ்வு’ என சொல்லப்படுகிறது.

 

உணவை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம் : சைவம், மாமிசம் மற்றும் இவை இரண்டின் கலவை. மாமிசம் என்பது மீனையும் கோழி இறைச்சியையும் உள்ளடக்கியது. பால் மாமிச படைப்பேயாகும், அது எவ்வகையிலும் ஒரு கறாரான சைவ உணவில் அடங்காது. இது மருத்துவ மொழியில் மாமிச உணவு என்றே வகுக்கப்படுகிறது. சாதாரண ஒருவன் பாலை மாமிச உணவு என கருதுவதில்லை. மறுபுறம் முட்டையை மாமிச உணவு என கருதுகிறான். ஆனால் உண்மையில் அவை அவ்வாறல்ல. தற்காலத்தில் உயிரற்ற முட்டைகளும் உற்பத்தியாகின்றன. சேவலையே கொழிகள் பார்க்க அனுமதிக்கபடுவதில்லை, ஆனாலும் முட்டையிடுகிறது. உயிரற்ற முட்டைகள் ஒருபோதும் குஞ்சு பொரிப்பதில்லை. ஆதலால் பால் அருந்தும் ஒருவனுக்கு உயிரற்ற முட்டைகளை உண்பதில் ஆட்சேபனை இருக்க இயலாது. மனிதனின் உடலமைப்பையும் உள்ளுறுப்புகளையும் வைத்துப் பார்க்கும்போது சைவ பட்சினியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற சிந்தனைசார்பு வலுவாக வளர்ந்து வருகிறது, இருந்த போதிலும் மருத்துவ கருத்து கலவை உணவையே பரிந்துரைக்கிறது. மனிதனின் பற்கள், வயிறு, குடலமைப்பு போன்றவற்றை நாம் பார்க்கும்போது இயல்பிலேயே அவன் ஒரு சைவ பட்சினி என்கிற எண்ணத்தை  வலுசேர்ப்பதாக உள்ளது.

 

சைவ உணவு என்பது தானியங்கள், பருப்பு வகைகள், கிழங்குகள், தண்டுகள், கீரைகள், பழங்கள், உலர் பழங்கள், பிஸ்தா, வாதுமை போன்ற கொட்டை வகைகள் ஆகியவை.நான் எப்போதுமே தூய சைவ உணவின் ஆதரவாளன். ஆனால் பூரண ஆரோக்கியத்துடன் திகழ சைவ உணவு என்பது பாலும் தயிர், வெண்ணெய் போன்ற  பால் பொருட்களும் இணைந்ததாக இருக்க வேண்டும் என்பதை அனுபவம் எனக்கு உணர்த்தியது. இது எனது முந்தைய எண்ணத்திலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றமாகும். நான் ஆறு ஆண்டுகளுக்கு பாலை தவிர்த்திருந்தேன். அச்சமயத்தில் இதை பற்றி சிறிதும் எனக்கு கவலையில்லை. ஆனால் 1917ல் எனது அறியாமை காரணமாக கடுமையான வயிற்றுப்போக்குக்கு ஆளானேன். நான் எலும்பும் தோலுமானேன், அப்பொழுதும் மருந்து உட்கொள்ளுதலை கடுமையாக மறுத்தேன், அதே கடுமையுடன் பாலையும் மோரையும் மறுத்து வந்தேன். ஆனால் என் உடலை தேற்ற முடியவில்லை, படுக்கையிலிருந்து எழுவதற்கு போதுமான பலமில்லை. நான் பால் அருந்துவதில்லை என்ற உறுதி எடுத்திருந்தேன்.

 

நான் உறுதியேற்ற பொழுதில் பசுவையும் எருமையும் குறித்துதான் எண்ணியிருப்பேன், ஆகவே அந்த உறுதி ஆட்டுப்பால் அருந்துதலை தடை செய்யாது அல்லவா என எனது மருத்துவ நண்பர்  கேட்டார். எனது மனைவியும் அதற்கு ஆதரவளிக்க நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். உண்மையில் சொல்லப்போனால் ஒருவர் உறுதியேற்கும் போது மாட்டையும் எருமையும் பற்றித்தான் எண்ணியிருப்பார், பால் விலக்கப்படவேண்டும் என உறுதி ஏற்பார். அனைத்து விலங்குகளின் பாலின் உட்கூறுகளின் விகிதம் மாறுபட்டாலும் சேர்த்துப் பார்த்தால் நடைமுறையில் அனைத்துமே ஒரே மாதிரியானவைதான். ஆக நான் பெயரளவில் தான் உறுதியேற்றிருந்தேன், அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் அல்ல என கூறலாம். இது இப்படியிருக்க ஆட்டுப்பால் கறக்கப்பட்டது, உடனே நான் குடித்தேன். இது எனக்கு புதுவாழ்வு அளித்தாற்போல் இருந்தது. நான் அதிவிரைவாக தேறினேன், என்னால் உடனே படுக்கையிலிருந்து எழ இயன்றது. இதனாலும் இதுபோன்ற சில அனுபவங்களாலும் ஒரு கறாரான சைவ உணவில் பாலை சேர்த்துக் கொள்ளும் அவசியத்தை ஒப்புக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஆனால் பால் மற்றும் மாமசித்திலிருந்து கிடைக்கப்பெறும் இன்றியமையாத சத்துக்களை அதிலுள்ள கெடுதல் அம்சங்களானகளான நெறிபிறழ்வுகளும், பிற பிறழ்வுகளும் தவிர்க்க பட்ட இந்த பரந்துபட்ட காய்கறி தொகுப்பிலிருந்தே ஏதோவொரு வகையில் பெற்றுக்கொள்ளலாம் என சமாதானமடைந்தேன்.

 

பாலையும் மாமிசத்தையும் உண்பது பல்வேறு கேடுகளை விளைவிக்கும் என்பது எனது கருத்தாகும். மாமிசம் பெறவேண்டுமென்றால் நாம் கொல்ல வேண்டும். குழந்தை பருவத்தில் நாம் அருந்தும் தாய்ப்பாலைத் தவிர பிற பால் வகைகளை அருந்துவதற்கு நமக்கு நிச்சயமாக உரிமையில்லை. இதில் நெறி பிறழ்வு மட்டுமல்லாமல் ஆரோக்கிய நோக்கிலும் கூட சில பிறழ்வுகள் உள்ளன. பாலும் மாமிசமும் அந்த விலங்கின் குறைபாடுகளைக் கொண்டிருக்கும். வீட்டு விலங்குகள் அரிதாகத்தான் முழு ஆரோக்கியத்துடன் உள்ளன. மனிதனைப் போலவே கால்நடைகளும் எண்ணற்ற வியாதிகளை கொண்டுள்ளன. சீராக பரிசோதிக்கப்பட்ட கால்நடைகள் கூட நாம் அறியாமல் நோய் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அது போக இந்தியாவில் உள்ள அனைத்து கால்நடைகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்குவது என்பது இயலாத காரியமாகும்.

 

நான் சேவாகிரம் ஆசிரமத்தில் ஒரு பண்ணை வைத்துள்ளேன். நான் எளிதில் மருத்துவ உதவி பெற முடியும், இருப்பினும் அனைத்து கால்நடைகளும் ஆரோக்கியமாகத்தான் உள்ளன என்று உறுதி அளிக்க இயலாது. மாறாக எங்கள் அனைவராலும் ஆரோக்கியமானது என  கருதப்பட்ட ஒரு பசுவானது பின்னர் அது எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இது அறியப் படுவதற்கு முன்பு ஆசிரமத்தில் அனைவரும் இந்த பசுவின் பாலை அருந்தி வந்தோம். எங்கள் ஆசிரமம் அக்கம் பக்கத்தில் இருந்த விவசாயிகளிடம் இருந்து கூட பாலை பெற்றுக் கொண்டிருந்தது. அந்த கால்நடைகள் முறையாக பரிசோதிக்கப்பட்டது இல்லை. ஒரு குறிப்பிட்ட பால் அருந்துவதற்கு பாதுகாப்பானது என்பதை உறுதியாக சொல்ல இயலாது. நாம் பாலை காய்ச்சுவதால் ஒருவாறு திருப்தி அடையலாம். ஆசிரமத்திலேயே கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் பால் மற்றும் பால்  பொருட்களின்  நிலை பற்றி உறுதியாக சொல்ல இயலாத நிலையில் பிற இடங்களில் அதை நாம் எதிர்பார்க்க இயலாது.

 

கறவை மாடுகளுக்கு பொருந்தக்கூடியது இறைச்சிக்காக கொல்லப்படும் விலங்குகளுக்கு கூடுதலாக பொருந்தும். பொதுவாக இதிலிருந்து மனிதன் தப்புவது அதிர்ஷ்டத்தின் கையில் உள்ளது. அவன் பொதுவாக ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை. அவன் மருத்துவர்கள் மற்றும் வைத்தியர்களின் கையில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறான். செல்வம் சேர்ப்பதும் சமூக அந்தஸ்தும் அவனது முக்கிய கவலை ஆகும். இந்தப் பற்று பிற அனைத்தின் மீதான கவலையை பின்னுக்குத் தள்ளி விடுகிறது. பால் மற்றும் இறைச்சியின் இடத்தை காய்கறிகளை வைத்து நிரப்பும் முறையை விஞ்ஞானிகள் ஆய்ந்தறிந்து கண்டுபிடிக்காத வரை மனிதன் அதை எடுத்துக் கொண்டே இருப்பான்.

 

நாம் இப்போது கலவை உணவைப் பற்றிப் பேசுவோம். தன் உடலுறுப்பு வளர்ச்சிக்கும் தனது அன்றாட உடல் தேவைக்கும் அதன் அடிப்படையாக அமைந்த திசுவின் வளர்ச்சிக்கும் உணவு தேவையாகிறது. அந்த உணவானது போதுமான சக்தி, கொழுப்பு, சில வகை உப்புகள்  கழிவு நீக்குவதற்கு தேவையான நார்ச்சத்துக்கள் ஆகியவற்றையும்  கொண்டிருக்க வேண்டும். திசு வளர்ச்சிக்கு தேவை புரதம் ஆகும். அதை பால் மாமிசம் முட்டை பருப்பு கொட்டை ஆகியவற்றிலிருந்து நாம் பெறமுடியும்.

 

பால் மற்றும் இறைச்சியில் இருந்து கிடைக்கும்  விலங்கு புரதமானது  காய்கறிகளில் கிடைக்கும் புரதத்தை விட எளிதில் செரிக்கக் கூடியதாகவும் கிடைக்கக் கூடியதாகவும் இருப்பதால் அது மேம்பட்டது. பால் இறைச்சியை விட மேலானது. இறைச்சி செரிக்காத போது கூட பால் எளிதில் செரித்துவிடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சைவர்களை பொறுத்த வரையில் உணவின் முக்கிய அம்சமான விலங்கு புரதமானது பாலில் இருந்து மட்டுமே அவர்களுக்கு கிடைக்கிறது. அனைத்து புரதங்களிலும் பச்சை முட்டையில் இருந்து கிடைக்கக்கூடிய புரதம் தான் எளிதில் செரிக்கக் கூடிய தாகும். ஆனால் அனைவருக்கும் பாலை வாங்கும் சக்தியும் இல்லை அது அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. நான் இப்பொழுது பாலை குறித்து ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். பொது நம்பிக்கைக்கு மாறாக கொழுப்பு நீககப்பட்ட பால் அருந்துவதற்கு மிக நன்று.

 

சமயங்களில் அவ்வாறு கொழுப்பு நீக்கா பாலை விட பயன்மிக்கது. திசுக்களை  சீரமைப்பதற்கும்  வளர்ப்பதற்கும் தேவையான விலங்கு புரதத்தை அளித்தல் பாலின் முக்கிய பணி. கொழுப்பு நீக்கும் போது புரதம் பாதிப்படைவதே இல்லை. மேலும் இப்போதுள்ள கொழுப்பு நீக்கி கருவி கொழுப்பை முழுவதும் நீக்குவது இல்லை. அப்படி ஒரு கருவி தயாரிக்கப் பட போவதும் இல்லை. கொழுப்பு நீக்கியதோ நீக்க பாடாததோ பாலை தவிரவும் உடலுக்கு பிற தேவைகள் உள்ளது. கோதுமை, அரிசி, ஜோவர், பாஜ்ரா போன்ற தானியங்கள்களுக்கு நான் இரண்டாம் இடம் வழங்குவேன்,

இதெல்லாம் அன்றாட உணவுகள். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தானியங்கள் அன்றாட உணவாக உள்ளது. பல இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தானியங்கள் ஒரே சயத்தில் உண்ண படுகிறது.

 

உடல் வளர்க்க இக்கலவை தேவையில்லை. இது அளவு கட்டுப்பாட்டை  பேணுதை சிரமமாக்கும், செரித்தலை மேலும் கடினமாக்கும். இந்த எதிரிகள் (?) பிரதானமாக மாவு சத்தை நல்குகிறது, ஒரே சமயத்தில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வது நன்று. கோதுமையை தானியங்களின் அரசன் என கூறலாம். நீங்கள் உலக வரை படத்தை பார்த்தால் அது முதல் இடம் பிடிக்கும். ஆரோக்கிய நோக்கில் நமக்கு கோதுமை கிடைத்தால் அரிசியும் பிற தானியங்களும் தேவையற்றது. அது கிட்டாத போது ஜோவார் போன்ற தானியங்கள் செரிமானம் செய்தல் கடிது என்பதால் அதை புறந்தள்ளி நாம் அரிசியையே நாட வேண்டும்.

 

தானியங்கள் முறையாக சுத்தம் செய்ய பட்டு இயந்திரத்தில் உமி நீக்கி அரைத்து மாவை அப்படியே பயன்படுத்த வேண்டும். மாவை சலிப்பதை தவிர்க்க வேண்டும். இச்செயல் உப்புசத்தையும் வைட்டமினையும்  வழங்கும் தானியதின் மெலுறையை நீக்கிவிடும், இவை இரண்டும் ஊட்ட சதுணவின் நோக்கில் முக்கியமானவை. இந்த மேல் உறை குடலியக்கத்திற்கு தேவையான தவிட்டை அளிக்கிறது.

 

அரிசி மணி மிக மென்மையானது, இயற்கை அதற்கு  உமியை அளித்துள்ளது. இது உண்ண தகுந்ததல்ல. இந்த உமியை நீக்க அதை உருளையில் உருட்டவெண்டும். இந்த உருட்டல் அரிசியின் உமியை மட்டும் நீக்க போதுமான அளவில் இருக்க வேண்டும். ஆனால் இந்த இயந்திர உருட்டல் உமியை மட்டும் நீக்காமல் அரிசியின் மேல் உறையையும் நீக்கி பளபளப்பாக்குகிறது. இவ்வாறு பளபளக்காக்கினால் அதை பாதுகாப்பாக சேமித்து வைக்க இயலும் என்பது இச்செயலின் வரவேற்புக்கு காரணம் என பரவலாக சொல்லபடுகிறது. இந்த மேல் உறை சுவையானது, இதை நீக்கவில்லை என்றால் அது பூச்சிகளை கவரும்.

 

பாலிஷ் செய்த மேலுறையற்ற அரிசியும் கோதுமையும் நமக்கு கிட்டத்தட்ட தூய மாவுசத்தை அளிக்கிறது. ஆனாலும் தானியங்களின் முக்கிய அம்சம் அதன் மேலலுறை நீக்கபடுவதால் இழக்கப்படுகிறது. பாலிஷ் செய்தபின் அரிசி தவிடு விற்க படுகிறது. இதுவும் கோதுமை தவிடும் நாம் சமைத்து உண்ணலாம். இதை நாம் சப்பாத்திககளாகவும் கேக்குகளாகவும் செய்யலாம். அரிசி  சப்பாத்தி சாதத்தை விட எளிதில் ஜீரணமாகும் வாய்ப்புண்டு மேலும் அதை குறைவாக உண்டால் கூட முழு நிறைவளிக்கும்.

 

சாப்பிடும் போது ஒவ்வொரு விள்ளளையும்  காய்கறி  குழம்பிலோ பருப்பு குழம்பிலோ முக்கி உண்பது நமது வழக்கம். இதனால் பெரும்பாலானோர் மெல்லாமல்  முழுங்குகின்றனர். மென்று உண்பது ஜீரணித்தலில் முக்கிய செயல்பாடாகும், குறிப்பாக மாவை பொறுத்து. மாவு உணவின் ஜீரணம் அது நமது வாய் உமிழ் நீரை தொட்டவுடன் துவங்கி விடும். மெல்லுதல் உணவை உமிழ்நீர்ருடன் முழுமையாக கலத்தலை உறுதி செய்கிறது. ஆகவே மாவு உணவை நாம் உலர்ந்த தன்மையில் உண்ண வேண்டும், அது அதிக உமிழ் நீர் சுரத்தலை ஏற்படுத்தி நன்றாக அசை போட நம்மை நிற்பந்திக்கிறது.

 

நமக்கு மாவளிக்கும் தானியங்களுக்கு பிறகு புரதமளிக்கும் பருப்பு, அவரை, பயிறு போன்றவை வருகிறது. கிட்டத்தட்ட அனைவருமே பருப்புகளளை  உணவின் இன்றியமையாத அங்கமாக கருதுகிறார்கள்.  அசைவ உணவை உண்பவருக்கும் கூட பருப்பு தேவை. கடின உடல் உழப்பாளிகள் பாலருந்தும் வசதி இல்லை என்றால் பருப்புகள் இன்றி இயலாது என்பதை எளிதில் உணரலாம். ஆனால் உடலுழைப்பு தேவையற்ற பணியிலுள்ள உதாரணமாக எழுத்தர்கள், வியாபாரிகள், மருத்துவர்கள் போன்றோர் அவர்களில் பாலை வாங்கும் சக்தியுடையோருக்கு  பருப்புகள் தேவையில்லை என தயக்கமின்றி கூறுவேன். பருப்புகள் செரிக்க கடிது என பொதுவாக கருதப்படுகிறது அவை தானியங்களை விட மிக குறைந்த அளிலேயே உண்ண படுகிறது. பருப்பு,பயறு,விதை வகைகளில் துவரையும் ராஜ்மாவும் செரிக்க கடிது, கடலை பருப்பும் மைசூர் (மசூர்) பருப்பும் செரிக்க எளிது.

 

காய்கறிகள் பழங்கள் நமது பட்டியலில் மூன்றாவது. ஒருவர் இது இந்தியாவில் மலிவாகவும் எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என எனலாம். ஆனால் அது அவ்வாறல்ல. அவை நகர மக்களின் நாகரிக சுவை  மோஸ்தருக்காக உள்ளது என பொதுவாக கருதப்படுகிறது. கிராமங்களில் புது காய்கறிகள் அரிது, பெரும்பாலான இடங்களில் பழங்களும் கிடைப்பதில்லை. கறிகாய்கள், பழங்களின் பற்றாகுறை இந்திய நிர்வாகத்தின் மீது படிந்துள்ள கறையாகும். கிராமத்தினர் நினைத்தால் நிறைய பச்சை கறிகாய்களை விளைவிக்கலாம். பழங்களின் பிரச்சினையை அவ்வளவு எளிதில் தீர்க்க இயலாது. கிராமத்தினர் நோக்கில் இந்த மண்ணின்  ஆட்சி நிர்வாகம் கேடானது. ஆனால் இவ்விடதில் நான் இந்த விவாத வரம்பை மீறி

பேசுகிறேன்.

 

புதிய காய்ககளில் கணிசமான அளவு கீரைகளை தினமும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் இதில் சர்க்கரை வள்ளி, உருளை கிழங்கு முதலிய பிரதானமாக மாவு சத்தை அளிக்கும் காய்கறி வகைகளை சேர்க்கவில்லை. இதை நாம் மாவு சத்தை வழங்கும் தானிய வகையில் தான் சேர்க்க வேண்டும். ஓரளவு சாதாரண புது காய்கறிகளை சேற்பது நன்று. வெள்ளரி, தக்காளி, எள் இலைகள், கீரைகளை போன்ற சில வகைகளை நாம் சமைக்க தேவையில்லை. அதை நன்றாக கழுவி பச்சையாகவே சிறிதளவு நாம் உண்ணலாம்.

 

பழங்களை பொறுத்து அந்ததந்த மாதங்களில் கிடைக்கும் பழங்களை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக தற்போது மாவும் திராட்சையும் கிடைக்கும் மாதம். பழங்களை உண்ண சிறந்த பொழுது விடி காலை. பாலும்  பழங்களும் காலை உணவுக்கு மிக நிறைளிப்பது. மதிய உணவை முன்பே உண்பவர்கள் காலை உணவாக பழங்களை மட்டுமே உண்ணவேண்டும். வாழை பழம் நன்று. ஆனால் அது மாவுச்சத்து மிக்கது, ரொட்டிக்கு  அது மாற்றாகும். பாலும் வாழை பழமும் கச்சிதமான உணவு. குறிப்பிட்ட அளவு கொழுப்பும் தேவை. எண்ணெய் அல்லது நெய்யை சேர்த்துக்கொள்ளலாம். நெய் எடுத்து கொண்டால் எண்ணெய் தேவையற்றது. எண்ணெய் செரிக்க கடிது அது தூய நெய் அளவுக்கு ஊட்டமளிப்பதும் அல்ல. தலைக்கு ஒரு நாளைக்கு (ஒன்றரை அவுன்ஸ்) நெய் உடலின் தேவையை போதுமான அளவு பூர்த்தி செய்யும். கொழுப்பு நீக்கா பால் அருந்துதலும் நெய்யை உண்பதற்கு இணையாகும். இதை வாங்கும் சக்தியற்றோர் கொழுப்பிற்காக போதுமான அளவு எண்ணெயை சேர்த்து கொள்ளலாம்.

 

எண்ணெய்களில் பாதாம் எண்ணெய் (sweet oil), தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணை ஆகியவை நமது முதல் தேர்வு. கிடைத்தால் கையால் ஆட்டப்பட்ட எண்ணெயை பயன்படுத்தலாம். சந்தையில் விற்கபடும் எண்ணையும் நெய்யும் பொதுவாக தரமற்றது. இது மிகவும் பரிதாபத்திற்குரிய வெட்கக்  கேடான விஷயம். நேர்மை என்பது கல்வி புகட்டியோ  சட்டம் இயற்றியோ வியாபாரத்தில் பிரிக்க முடியாத அம்சம் என ஆகும் வரையில், ஒருவன் விழிப்புடன் பொறுமையுடன் கண்காணித்து தான் தரமானதை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவர் ஒருபோதும் இது தான் கிடைக்கிறதே என்று தரமற்ற பண்டத்தை கொண்டு திருப்தி அடையக்  கூடாது. கெட்டுப்போன கலப்படமான எண்ணை, நெய்யை பயன்படுத்துவதை விட அதை முற்றிலும் தவிர்த்தல் நன்று. கொழுப்போடு சற்று சர்க்கரையும் தேவை. இனிப்பான பழங்கள் நமக்கு நிறைய சர்க்கரை சத்தை தந்தாலும், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை  அவுன்ஸ் வெள்ளை அல்லது நாட்டு சக்கரை எடுத்து கொள்வது தவறல்ல. இனிப்பான பழங்கள் இல்லையென்றால் சக்கரை ஒருவருக்கு மிக அவசியம். ஆனால் இன்றைய தினங்களில் இந்த இன்னிப்பு பண்டங்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது தவறு.

 

நகர வாசிகள் அதிக இனிப்பு பண்டங்களை தின்கிரார்கள். பால் கோவா, பாலில் செய்த இனிப்புகள், மற்றும் பிற வகை இனிப்புகளை அதிக அளவு நுகற்கிரார்கள். குறைவாக உண்டால் அன்றி அது தேவையற்றதும் கேடு விளைவி்ப்பதும் ஆகும்.  லட்சக்கணக்கான மக்கள் ஒரு வேளை முழு உணவின்றி இருக்கும் ஒரு நாட்டில் அதிக அளவு இனிப்புகளையும் சுவையூட்டிகளையும்  உண்பது என்பது வழிபறிக்கு நிகரானது என கூறுதல் மிகையன்று.

 

இனிப்புகளுக்கு பொருந்துவது அதே அளவில் நெய்யிற்கும் எண்ணைக்கும் பொருந்தும். எண்ணையிலோ நெய்யிலோ வறுக்கப்பட்ட உணவை உண்ணவேண்டிய தேவையே இல்லை. பூரியும் லட்டுவும் செய்ய நெய்யை பயன்படுத்துவது யோசனையற ஊதாரித்தனமாகும். இதை சாப்பிட்டு பழகாதவர்கள்  இவைகளை ஒருபோதும் சாப்பிட முடியாது. இதை உண்பவர்கள் அடிக்கடி நோயில் விழுவதை நான் பார்த்துளேன். சுவை ஒரு நா பழக்கமே அன்றி பிறவியிலேயே நம்முடன் வந்ததல்ல. உலகின் அனைத்து சுவைகளும் ஒரே மாதிரி இருக்காது, அதேசமயம் பசியற்ற சமயத்தில் ஒருவன் மிக சிறந்த இனிப்புகளை தவிர்க்கவேண்டும்.

 

இப்போது எத்தனை வேளை எவ்வளவு உண்ணலாம் என பார்க்கலாம். மருந்தை போல உணவையும் தவறாத கடமை போல எடுத்துக்கொள்ளவேண்டும், ஒருபோதும் வகைகைக்கொன்று என்று சாப்பிடக் கூடாது. பசிக்கு தான் ருசியே தவிர அது பிறவாறு  இல்லை என சொல்லலாம். நமது தவறான பழக்கங்களாலும் இயந்திர வாழ்க்கை முறையாலும் நமது உடலமைப்புக்கு என்ன தேவை என்பதை சிலரே அறிவர்.

நமது பெற்றோர் புலனடக்கத்தை ஒரு விதிபோல கொள்வதில்லை. அவர்களின் வாழ்க்கை முறையும் பழக்கவழக்கங்களும் குழந்தைகளை ஓரளவு பாதிக்கிறது. பேறுகாலத்தில் தாய் உண்ணும் உணவு குழந்தையை பாதிக்கிறது.

 

 

குழந்தையின் வளர் பருவத்தில் அதன் தாய் அனைத்துவிதமான சுவையான உணவுகளையும் குழந்தை  மீது குவிக்கிறார். குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மாறாக சிறிது உண்ணக்கொடுக்கிறார் தானும் அப்படியே உண்கிறார் குழந்தையின் செரிமான அமைப்பு  குழந்தை பருவம் முதலே தவறாக கற்றுக்  கொள்கிறது. பழக்கத்தை ஒருமுறை பழகினால் அதை கைவிடுதல் கடிது. இங்கு மிக சிலரே பழக்கத்தை வெல்கிறார்கள். ஆனால் அவன் வளர்ந்த பிறகு தனது உடலை தான் தான் பேணவேண்டும் என உணர்ந்த பிறகு அவனது உடலை ஏதேனும் சேவைக்கு அர்ப்பணித்த பிறகு தனது உடலை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும் என்கிற அவசிய விதியை பின் பின்பற்றுவதை கடினமாக உணர்கிறான்.

 

 

நாம் இந்த கட்டுரையை படிக்கும்  உடலுழைப்பை அடிப்படையாக கொள்ளாத பணியை   செய்யும் பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு நாளைக்கு தேவையான  உணவு வகைகள்,  தேவை, அளவு குறித்து ஒரு பட்டியலிடும் இடத்திற்கு நாம் வந்து விட்டோம்.

 

(புரிதலுக்காக அவுன்சுகள், பவுண்டுகள் மில்லிகளாகவும் கிராம்களாகவும் மாற்றப்பட்டுள்ளன)

 

மாட்டு பால்                  – 900ml/900gm

தானியம் (அரிசி,கோதுமை, கம்பு.. அனைத்தும் சேர்த்து) – 170gm

கீரை வகைகள்           – 85gm

பிற காய்கறிகள்         – 140gm

பச்சை காய்கறிகள்    – 28gm

நெய்                               – 42gm

வெண்ணெய்               – 56gm

வெள்ளை சர்க்கரை    – 42gm

எழுமிச்சை                    – 2 எண்ணம்

பழங்கள்                        – சுவை மற்றும் வசதிகேற்ப

உப்பு                                – சுவைக்கேற்ப

 

 

 

எப்படியிருந்தாலும் ஒரு நாளைக்கு இரண்டு எலுமிச்சை எடுத்துக்கொள்வது நன்று. அதை பிழிந்து காய்கறிகளுடன் சேர்த்தோ சூடான அல்லது குளிர்ந்த நீரிலோ கலந்து எடுத்துக்கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட எடை அளவு சமைப்பதற்கு முன்பானது.

 

இப்போது எத்தனை வேளை  நாம் சாப்பிடலாம் ?

பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உண்கிறார்கள். பொதுவாக நாம் மூன்று வேளை சாப்பிடலாம் : முன் காலையில் வேலைக்கு செல்லும் முன்பு காலை உணவு, நாடு பகலில் மத்திய உணவு மாலையிலோ பொழுது சாய்ந்தபோதோ இரவுணவு. மூன்று வேளைக்கு மேல் சாப்பிட  எந்த ஒரு தேவையும் இல்லை. நகரங்களில் அவ்வவ்போது சிறு தின்பண்டங்களை கொறித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பழக்கம் கேடு விளைவிப்பதாகும். செரிமான உறுப்புக்கு ஓய்வு தேவை.

 

மூலம் :   “Key To Health” என்கிற புத்தகத்தில் இருந்து.

 

——-*****——-

 

வேறொரு பகுதில் இருந்து காந்தியின் அன்றாட வாழ்வு :

 

காலை   4.00    துயில் எழுதல்
4.20    காலை கூட்டு பிரார்த்தனை, எழுத்து,வேலை அல்லது ஓய்வு
7.00  காலை உணவு, காலை நடை (5 கி மீ), சமயலுக்கு உதவுதல், பொதுவான தூய்மை பணி, கழிவறையை சுத்தம் செய்தல், பாத்திரம் துலக்குதல், காய்கறி நறுக்குதல், கோதுமை ஆராய்தல் முதலியவை

8.30  Visitors, writing or reading work  சந்திப்புகள், எழுதுதல், படித்தால்.
9.30 வெய்யிலில்  எண்ணை தேய்த்துக்கொண்டு  தொட்டியில் குளித்தால் (குளிக்கும்போதே சோப்பும் கண்ணாடியும் இன்றி சவரம் செய்தல்)

11.00 மதிய உணவு

மதியம்  1.00  கடிதங்கள், சந்திப்புகள்
4.30  நூற்பு
மாலை 

 

 5.00 மாலை உணவு
6.00  மாலை பிரார்த்தனை, உரை
6.30  சிறிது நேரம் மாலை நடை
9.00  படுக்கைக்கு செல்லுதல்  ( திங்கள் கிழமைகளில்  மௌன விரதம் இருந்து விடுபட்ட பணிகளை முடிப்பார்)

 

 

கிருஷ்ணன்

ஈரோடு

 

Was Mahatma Gandhi India’s first nutritionist and diet guru? 

Inside Mahatma Gandhi’s Search For The Perfect Diet

His Experiments with Food: The Fascinating History Behind Bapu’s Diet Plans!

 

முந்தைய கட்டுரைஅறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்