ஹராரியின் கலகச்சட்டகம்
அன்புள்ள ஜெ,
யுவால் பற்றி வந்த கடிதமும் அதில் இருந்த எழுத்தாளர் ச.க உரையாடலும் பார்த்தேன். சா.க அது முக்கிய புத்தகம் என ஏற்றுக்கொள்கிறார். அது அறிவுசார்ந்த புத்தகம் என்கிறார். ஆனால் கடிதத்தில் இது கலகத்துக்காக எழுதப்பட்ட புத்தகம் என்ற தொனி இருக்கிறது. https://www.jeyamohan.in/127830#.XeQXMpMzb3g
நீங்களே ஒருமுறை குறிப்பிட்டது போல சம்பவங்களையும் செய்திகளையும் நிகழ்காலத்தில் மட்டுமே வைத்துப்பார்ப்பதும் ஒருமுனைப்படுத்துவதி பொங்குவதுமே இப்போதைய பொது சிந்தனைப்போக்காக இருக்கிறது.இதனால் முழுமையான பார்வை இல்லாமல் வெறும் சச்சரவும் எழுகின்றன.
இந்த நேரத்தில் சேப்பியன் போன்ற புத்தகம் தரும் வரலாற்று நோக்கின் முக்கியத்துவம் முக்கியமானதுதான் இல்லையா? இப்போது சந்திக்கும் பிரச்சனையை புரிந்துகொள்ள எங்கிருந்து வந்தோம் என்பதும் முக்கியம் தான் இல்லையா.
யுவால் மட்டுமல்ல ப்ரான்ஸிஸ் புகுயோமா, ஜெரால்ட் டைமண்ட் போன்றோரும் செய்தது இது தானே. இதைபற்றி உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.
இதைபற்றி எனது எண்ணங்களை எனது ப்ளாகிலும் எழுதியுள்ளேன்.
http://www.velavanam.com/2019/12/blog-post.html
உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா அல்லது பெஸிமிஸ்ட்டா
அன்புடன்
சுரேஷ் பாபு
***