சகஜ யோகம்,கடிதம்

 

சகஜயோகம்

அன்புள்ள ஜெ. .

 

நான் முன்பு எப்படி உங்கள் வாசகனோ? அப்படித்தான் இன்றும் நான் உங்கள் வாசகன்.அன்று எப்படி இலக்கியத்தில் உங்களை அணுக முடியாத இடத்தில் வைத்து பார்தேனோ அப்படியேதான் இன்றும் பார்க்கிறேன்..

 

ஒருவர் இந்து ஞான மரபினை  நவீன கண்கொண்டு அந்த தத்துவத்தை பயில உங்களைத்தான் அணுக முடியும் என்பதில் தீர்க்கமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். .ஒருவர் தமிழிலியக்கியத்தில் பரிட்சயமாகி அதன் வீச்சில் நான் இன்னும் வேகமாக பயணிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் நீங்கள்தான் உறுதுணையாக உள்ளீர்கள். .நிற்க.

 

ஆனால் உங்களது அரசியல் கருதுகோள்களுக்கு மாற்று தரப்பு இருக்கக்கூடாது என்று நீங்களும் நினைக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.காரணம் அப்படி வலிமையான எதிர் தரப்பாகத்தான் நீங்களும் இருந்து வந்துள்ளீர்கள். .

 

திரு.ராஜசேகர் என்ற உங்கள் நண்பர் ஒருவர் நான் உங்களை நான்காம் தர விமர்சனம் செய்ததாக சொல்லியிருக்கிறார். .

 

நான் நீங்கள் மோடி ஆதரவளாராக இருக்க வேண்டும் என என்றும் நினைத்தது இல்லை.நீங்கள் பத்ம விருதை புறக்கணித்ததை கூட நல்லது என்றே நினைத்தேன். . உங்கள் சுயம் அழிந்து விடாமல் நீங்கள் நடைபோடுவது அவசியமானது.

 

ஆனால் நீங்கள் மோடிக்கு மாற்று என்று ராகுலை முன்னிறுத்தியதைத்தான் நான் விமர்சித்திருக்கிறேனே ஒழிய,அதுவும் தரம் தாழ்ந்தெல்லாம் இல்லை.உங்கள் மீது தாக்குதல் நடந்த போது,உங்கள் எண்ணுக்கு தொடர்பு கொண்டேன் அது Switched Off ஆகியிருந்தது.பின்பு வெண்பாவை தொடர்பு கொண்டு விஷயத்தை அறிந்து கொண்டு என் ஆறுதலைக் கூட சொல்லச் சொன்னேன். .இதை வளர விடாமல் முடிப்பதே நலம் என்று கூட சொன்னேன்.

 

நீங்கள் சினிமாவுக்கு சென்றதை பற்றியெல்லாம் நான் தரந்தாழ்ந்து என்றும் பேசியதில்லை.உண்மையில் நீங்கள் சினிமாவிற்கு வந்தது தமிழ் இலக்கிய உலகத்திற்கு பெருமையே.ஆனால் உங்களுக்கான உண்மையான இடம் இதற்கும் மேல் கிடைக்காது அதன் வணிக சுழல் அப்படிப்பட்டது என்பதும் அறிந்ததே.

 

இறுதியாக, நான் உங்களை அரசியல் ரீதியாக மறுக்கிற புள்ளி எதுவென்றால்? மோடிக்கு மாற்று ராகுல்,அதிமுகவிற்கு மாற்று திமுக என்பது மட்டும்தானே ஒழிய உங்களுடைய ஆளுமையையோ,பங்களிப்பையோ அல்ல.

 

கீழே நான் உங்களைப் பற்றி எழுதிய அந்தந்த நேரத்து மறுப்புகளை கொடுத்துள்ளேன். .இதில் தரம் தாழ்ந்த பதிவு எது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். .

 

என்றும் அன்புடன்

சுந்தர்ராஜசோழன். .

 

https://m.facebook.com/story.php?story_fbid=2255404524537624&id=100002042948330https://m.facebook.com/story.php?

story_fbid=2284417684969641&id=100002042948330https://m.facebook.com/story.php?

story_fbid=2198018406942903&id=100002042948330https://m.facebook.com/story.php?

story_fbid=2364429200301822&id=100002042948330https://m.facebook.com/story.php?

story_fbid=1922819291129484&id=100002042948330https://m.facebook.com/story.php?

story_fbid=2301633903248019&id=100002042948330https://m.facebook.com/story.php?story_fbid=2447002998711108&id=100002042948330

அன்புள்ள சுந்தரராஜ சோழன்

அக்கட்டுரை பொதுவாகவே எழுதப்பாட்டது, அதற்கான தொடக்கம் அந்தக் கடிதம். அதில் கூறப்பட்டுள்ளவற்றை சென்று சோதிக்கும் அளவுக்கு தொடபோ பொழுதோ எனக்கில்லை. பொதுவாக இந்த அதீத வசைகள் வந்துகொண்டிருப்பது ஓர் உண்மை என நீங்களும் அறிவீர்க. அதில் நீங்கள் இல்லை எனில் மகிழ்ச்சி

 

ஜெ

முந்தைய கட்டுரைமாபெரும் மலர்ச்செண்டு
அடுத்த கட்டுரைஆரோக்கிய நிகேதனத்தின் கண்ணீர்