சகஜயோகம்
அன்புள்ள ஜெ
சகஜயோகம் கட்டுரை வாசித்தேன். ஏறத்தாழ இதே வரிகளை தொடர்ச்சியாக சிறு இடைவெளிகளில் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். 2008ல் இந்த்த்தளம் ஆரம்பிக்கப்பட்டபோதே இதைச் சொல்ல ஆரம்பித்துவிட்டீர்கள். இப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதேவை நம் சூழலில் இருக்கிறது. அவ்வப்போது யாராவது நண்பர்கள் சொல்வார்கள். நீங்கள் வசைகளைக் கேட்டு வருத்தப்படுவதாக. ‘அப்டியே செத்திருப்பான் அந்தாளு” என்பார்கள். “போய்யா, எனக்கு அவரைத்தெரியும். அவரு கண்டுக்கறதே இல்லை” என்று நான் சொல்வேன். நீங்கள் உருவாக்கும் அந்தச் சொற்களனில் எனக்கு பங்கு இருக்கிறதோ இல்லையோ நான் அதில் ஒரு பகுதி. சென்ற பத்தாண்டுகளில் என் சிந்தனை அப்படி மாற்றம் அடைந்திருக்கிறது.நன்றி
பாஸ்கர்
அன்புள்ள ஜெ
கம்யூனிஸ்டுகள் மற்றும் இந்துத்துவர்கள் போன்ற கொள்கையரசியல் காரர்களின் அவதூறு மற்றும் வசை பற்றிச் சொல்லியிருந்தீர்கள். சில மாதங்களுக்குமுன்பு ஏறத்தாழ இதையே பவா செல்லத்துரை சொல்லியிருந்தார். தன் மகளிடம் எந்த ஒரு அமைப்பையும் கொள்கையையும் சார்ந்து செயல்படவேண்டாம், அவர்கள் பிரிந்துசென்றால் அளிக்கும் வன்முறையையும் தாக்குதலையும் சமாளிக்கமுடியாது என்று தன் அனுபவம் சார்ந்து சொல்லியிருந்தார்
ச.அன்பரசன்
அன்புள்ள ஜெ
கொள்கைவாதிகளின் தாக்குதலைப்பற்றி எழுதியதை வாசித்தேன். பின்தொடரும்நிழலின்குரல் நாவலில் ஓர் இடம். கட்சியில் நடப்பதைப்பற்றி வீரபத்ரபிள்ளையும் ராமசுந்தரமும் [எம். கல்யாணசுந்தரமா?] பேசிக்கொள்கிறார்கள். ராமசுந்தரம் வீரபத்ரபிள்ளையிடம் அறிவுரை சொல்கிறார். ஆனால் அவருக்கும் எல்லாமே தெரியும். ‘தோழர் நீங்கள் அவதூறுக்காகத்தானே பயப்படுகிறீர்கள்?” என்று வீரபத்ரபிள்ளை கேட்கிறார்.திகைத்துப்போய் நின்றிருக்கும் ராமசுந்தரம் அழுவதுபோல் ஆகிறார். ஒருவார்த்தைகூடப்பேசாமல் அப்படியே திரும்பிச் சென்றுவிடுகிறார்
எம் .ராஜேந்திரன்
அவதூறுகள் ஏன்?
வசைகள்
அவதூறுகள் குறித்து…
இஸ்லாம்: மிரட்டல்கள், அவதூறுகள்
கருத்தியலில் இருந்து விடுதலை
இந்துத்துவ முத்திரை
முத்திரைகள்
அ.மார்க்ஸின் ஆசி
இணைய உலகமும் நானும்
பெண்களின் அறிக்கை
புழுக்களும் சினிமாவும்
மொழி 6,மலையாளவாதம்
அவதூறு, கடிதம்
லோஸா
சில வம்புக்கடிதங்கள்…