மனுஷ்யபுத்திரன், திராவிட இலக்கியம்
மனுஷ்ய புத்திரன் என்கிற திமுக தெருமுனைப்பேச்சாளனின் அடாவடிக்கு ஜெயமோகன் ஆற்றியிருக்கும் எதிர் வினை
இதில் திராவிட இயக்கத்தினர், இடதுசாரிகளின் இலக்கிய நுண்ணர்வு அளவு குறித்த லாப் டெஸ்ட் ஒன்றுள்ளது. இடதுசாரிகள், திராவிய இயக்கதினரில் இலக்கிய வாசிப்புக்கொண்டவர்கள் மிகவும் அரிதாம்.
ஒரு கதை இருக்கிறது. அரசன் ஒருவன் தனக்கு சவரம் செய்யும் சவரத் தொழிலாளியிடம் ’’ நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ்கிறார்களா?’’ என்று கேட்டானாம். ’’ ஆம், மன்னா எல்லோரும் எலுமிச்சம் பழம் அளவு தங்கத்தோடு சந்தோஷமாக வாழ்கிறார்கள் ‘’ என்றானாம்.
அரசன் அன்றிரவே ஆள் அனுப்பி நாவிதன் வீட்டில் இருந்த எலுமிச்சம் பழம் அளவு தங்கத்தை திருடிக்கொண்டு வரச்சொல்லிவிட்டானாம். அடுத்த நாள் சவரத்தொழிலாளியிடம் நாட்டு நடப்பு பற்றிய அதே கேள்வியை மன்னன் கேட்டான் . ‘’ அதை ஏன் கேட்கிறீர்கள் மன்னா.. ஒரு எலுமிச்சம் பழம் அளவு தங்கத்தைக் கூட வைத்துக்கொள்ள முடியாத அளவு நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது’’ என்றானாம். இந்த சவரத் தொழிலாளியின் மனநிலையில்தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தன் நேரடி அனுபவம் மற்றும் மனபிராந்திக்கு எது தட்டுப்படுகிறதோ அதையே உண்மை என்று நம்புகிறவர் ஜெயமோகன். அது ஒரு கதை, கவிதை எழுத பயன்படலாம். ஒரு சமூக வரலாற்றை எழுத பயன்படாது
திமுகவினர் எதைப்படிக்கிறார்கள் எதைப்படிக்கவில்லை என்று ஏதாவது டேட்டா இருக்கிறதா?: இன்னொன்று உலகின் எந்த வெகுசன இயக்கத்தில் இலக்கிய நுண்வாசிப்பு பிரதான போக்காக இருந்தது? ரஷ்யாவில் புரட்சி செய்த பாட்டாளிகள் கார்ல் மார்க்ஸிம் டால்ஸ்டாயும் மக்சிம் கார்க்கியும் படித்துவிட்டு வந்தவர்களா?
இன்று திராவிட இயக்க நூல்களை அதன் இளம் தலைமுறையினர் பெருமளவில் கற்க ஆரம்பித்திருக்கின்றன என்பது ஜெயமோகனுக்குத் தெரியும். ஆனால் சோ.ராமசாமியின் திராவிட இயக்கத்தின் மீதான மனப்பிராந்திகொண்ட வெறுப்பு பிம்பத்தையே ஜெயமோகனும் கட்டமைக்கிறார். இது என்றோ காலாவதியாகிபோன பிம்பம். கமல்ஹாசனுக்கு எப்படி கணையாழியைத் தாண்டி நவீன இலக்கியம் தெரியாதோ அப்படித்தான் ஜெயமோகனுக்கும் திராவிட இயக்கம் பற்றி துக்ளக் பிம்பம் தாண்டி எதுவும் தெரியவில்லை
கிண்டில் போட்டி தொடர்பாக எனது எதிர்வினை ஃபேஸ்புக்கில் திராவிட இயக்கதினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கேவலமான அராஜகங்களுக்கு எதிராக நான் செய்த எதிர்வினை. அவர்களிடம் தர்க்க மொழியில் பேச வேண்டுமா?
நவீன இலக்கிய வாசிப்புத்தான் ஒருவரது நுண்ணர்வுக்கு அடிப்படை என்ற கூற்றைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. விமலாதித்த மாமல்லனையெல்லாம் பார்த்துவிட்டா இப்படிக் கூறுகிறீர்கள்?
இன்னொன்று திமுககாரனின் இலக்கிய நுண்ணறிவை சோதிக்கும் நீங்கள் நம் நவீன இலக்கிய நுண்ணறிவாளர்களின் சமூக அரசியல் நுண்ணறிவை கொஞ்சம் சோதித்தால் படு பயங்கரமாக இருக்கும். தந்தி பேப்பர்கூட படிக்க மாட்டான் சார்.
மற்றபடி படிக்கவைத்ததும் திராவிட இயக்கம்தான். படிப்பதும் திராவிட இயக்கத்தினர்தான். இன்று நவீன இலக்கியம் எழுதுபவர்களில் – படிப்பவர்களில் 75 சதவிகிதம் பேர் திராவிட இயக்க ஆதரவாளர்கள் என்று என்னால் நிரூபிக்க முடியும். இலக்கிய நுண்ணர்வு எல்லாம் ஜனநாயமாகி ரொம்ப வருஷமாகுது .
கூவம் நதிக்கரையில் வருகிற ஜக்கு மாதிரியே இன்னும் திமுககாரனுக்கு எவ்வளவு காலம் படம் போடுவீர்கள்? துக்ளக் வாசகர் வட்டத்தைவிட்டு வெளியே வாருங்கள்
மனுஷ்யபுத்திரன்
[ முகநூலில் இருந்து ]