யக்ஷி உறையும் இடம்
தீமை, அழகு- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
வணக்கம்
தங்களது ‘யட்சி உறையும் இடம்‘ பதிவு படித்தேன். படிக்கும் போதே நீண்ட நாட்களுக்கு முன்பே இதே கதையை எங்கோ படித்த ஞாபகம் உறுத்திக்கொண்டே இருந்தது. நீண்ட ஞாபக கிளறல்களுக்குப்பிறகு, மெல்பர்ன் அருங்காட்சியகத்தில் படித்த கதை ஞாபகம் வந்தது. பின் இணையத்தில் தேடி அந்த 130 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வின் கட்டுரைகளை கண்டேன். அதன் இணைப்புகள்:
https://en.wikipedia.org/wiki/Martha_Needle
https://www.booktopia.com.au/martha-needle-brian-williams/book/9781921024955.html
இரண்டு நிகழ்விலும், உறவினர்களை சிறுகச்சிறுக விசம் கொடுத்துக் கொன்றிருக்கிறார்கள், இறந்தவர்களுக்காக கதறி அழுதிருக்கிறார்கள், பெரிய சுயலாபம் ஓன்றும் இல்லை (மார்த்தா கிடைத்த ஆயுள் காப்பீட்டுப் பணத்தை கல்லறைகட்ட செலவு செய்திருக்கிறார்), சமுகத்தில் நல்ல பெயர் வாங்கி வாழ்ந்திருக்கிறார்கள், இவர்கள் கொலை செய்வார்கள் என்று யாரும் நம்ப மறுக்கும்படி நடந்திருக்கிறார்கள்.
நூற்றாண்டுகளாய் நிலம் தோறும் தோன்றும் யட்சிகளா இவர்கள் என்று எண்ண தோன்றுகின்றது.
நன்றி.
அன்புடன்
கோகுல்
கேன்பரா – ஆஸ்திரேலியா