பாலைநிலப் பயணம்

 

நேற்று காலை சென்னையிலிருந்து கிளம்பி ஒரு ஏழுநாள் பாலைநிலப் பயணம். ஜெய்ப்பூருக்கு காலை பத்தரை மணிக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஓசியான் வரை காரில் வந்து ஓரு விடுதியில் தங்கியிருக்கிறோம். பாலைநிலம் வழியாக  மூவாயிரம் கிலோமீட்டர் திட்டம். குஜராத் கட்ச் வளைகுடாவுக்குள் புகுந்து அங்கிருந்து ஊர் திரும்புகிறோம். பன்னிரண்டு நண்பர்கள் இரண்டு கார்கள்.

ராஜஸ்தான் பாலைநிலம் வழியாக இரண்டுமுறை ஏற்கனவே வந்திருக்கிறோம். அருகர்களின் பாதை பயணத்தின்போது தவறவிட்ட இடம் ஓசியான். ஊழ் இங்கே கொண்டுவந்திருக்கிறது.

முந்தைய கட்டுரைஒரே ஆசிரியரை வாசித்தல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-49