மகரிஷி- கடிதங்கள்

அஞ்சலி:மகரிஷி

மகரிஷி கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

தாங்கள் என் தந்தைக்கு (எழுத்தாளர் மகரிஷி)எழுதிய அஞ்சலியை படித்தோம். மிகவும் பொறுத்தமாகவும் , நெகிழ்வாகவும் இருந்தது.

 

உங்கள் எழுத்தில் இருந்த உண்மைக்கு மகரிஷியின் குடும்பம் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளது.

நன்றி

உங்கள்
ஸ்ரீவத்ஸன்

 

அன்புள்ள ஸ்ரீவத்சன் அவர்களுக்கு

நன்றி

நான் இளமைப்பருவத்தில் வாசித்த எழுத்தாளர். இன்றும் நினைவில் நிற்கிறார் என்பதனாலேயே அவருடைய இடமென்ன என்பதை உணர்ந்தேன்.

ஜெயமோகன்

அன்புள்ள ஜெ

மகரிஷி பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. அவரைப்போன்ற எழுத்தாளர்களை எப்படி மதிப்பிடுவது, எங்கே வைப்பது என்பதெல்லாம் பெரிய சிக்கல்தான். அவர் வார இதழில் எழுதியமையாலேயே இலக்கியவாதிகளால் மதிக்கப்படுவதில்லை. வார இதழ் வாசகர்களுக்கு ந்நேற்று கிடையாது சினிமாவிலும் அப்படித்தான்.

ஆனால் என் வாசிப்பில் இன்றைக்கு இலக்கியத்துக்குள் எழுதப்படும் பல படைப்புக்களை விட ஆழமானவை மகரிஷி எழுதியவை. உங்கள் கட்டுரை சிறந்த அஞ்சலியாக அமைந்தது

நன்றி

ஆர். ராமபத்ரன்

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-55
அடுத்த கட்டுரைஅறம்- கடிதங்கள்