கீதா பிரஸும் இந்து தேசியமும்

நீங்கள் podcast கேட்பீர்களா என தெரியவில்லை. ஆனாலும், இந்த நேர்காணல் / உரையாடலை கேட்க முயலுங்கள்.

http://www.seenunseen.in/episodes/2019/9/23/episode-139-the-gita-press-and-hindu-nationalism

சற்றே நீண்ட உரையாடல் தான்.

சமீபத்தில் வெளிவந்த அக்‌ஷயா முகுல் என்பவரின் Geeta Press and the making of Hindu India என்ற  புத்தகத்தை தழுவிய உரையாடல். இந்தியாவில், இந்துத்துவ (தற்கால இந்து மத) எண்ணங்கள் பரவ, பெண்கள், பிற மதத்தவர் குறித்த பரவலான எண்ணங்களை வடிவமைப்பதில்  கீதா பிரஸ் என்ற ஒரு அச்சகத்தின் முக்கியத்துவத்தை  குறித்த புத்தகம்.

சமீபத்தில், தொலைக்காட்சிகளுக்கு டி ஆர் பி என்பதை மாற்றி பார்க் BARC என்ற புது அளவீடை கொண்டு வந்தார்கள். அந்த அளவீடு கிராமப்புறம் சார்ந்த தகவல்களையும் சேர்த்து வெளியிட தொடங்கியது. உடனடியாக, டிஷ் மற்றும் அரசு தொலைக்காட்சிகள் பட்டியலில் மிகவும் மேல வரத் தொடங்கின.

பொதுவாக இந்திய அளவில் ஒரு பத்தாயிரம் புள்ளி வித்தியாசத்திலாவது சன் டிவி முதலிடத்தில் இருக்கும். இந்த தகவல் வந்த பிறகு, டங்கல் என்ற ஒரு தொலைக்காட்சி சன் டீவியை விடவும் ஒரு பத்தாயிரம் புள்ளிகள் அதிகமாக பெற்று முதலிடத்தில் உள்ளது. சில வாரங்களில் கடும் போட்டி. ஆனால், முதல் இடத்திற்கு இணையான இடத்தில் தான் உள்ளது.

இத்தனை ஆண்டுகளாக இப்படி அரசு தொலைக்காட்சிகளோ, இதுப்போன்ற சாதாரண தொலைக்காட்களுக்கோ இத்தனை பார்வயாளர்கள் உள்ளனர் என்ற தகவல் எங்கும் கிடையாது. (அரசு தொலைக்காட்சி டீ டி எச் இலவசம், ஆகவே கணக்கு கிடையாது).

விளம்பரதாரர்கள் அனைவரும் இந்த டி ஆர் பி, பார்க்கை நம்பி தான்  கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். அது தான் இந்திய சமுகம் என எண்ணுகிறார்கள். இப்படி வெளியே தெரியாமல் ஒரு பெரும் கூட்டம் உள்ளது என்பது எவருக்கும் தெரியவில்லை. கவலையும் இல்லை.

அதுப்போல், யாரும் கண்டுக்கொள்ளாமல், ஆனால், உள்ளே ஒரு செயல்பாடாக கீதா பிரஸின் பரவல் நடந்துக்கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால், நீங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் என தோன்றியது. சாரதா நகருக்கு அமேசானில் ஆர்டர் செய்துள்ளேன்.  எனக்கு முன்பே யாரும் உங்களுக்கு அனுப்பி இருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன்.

போஜ்புரி மொழி தொலைக்காட்சியான டங்கல், ஹிந்திக்கு மாறியதும்  ஸ்ரீ கிருஷ்ணா, ராமாயணா போன்றவற்றை மறுஒளிபரப்பு செய்து தான் இந்த இடத்திற்கு முதலில் வந்தது என்பது கொசுறு செய்தி!

அன்புடன்,

சந்தோஷ்.

***

முந்தைய கட்டுரைஓஷோ மயக்கம் -கடிதம்
அடுத்த கட்டுரைநீ எனும் தற்சுட்டு- அபி கவிதைகள் பற்றி…. இசை