வாஷிங்டனில்…

 

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் சென்ற மாதம் வாசிங்டன் வந்த போது உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இரண்டு நாட்கள் உங்களோடு வாசிங்டனில் சுற்றியது நல்ல அனுபவம். நீங்கள் 2015இல் வந்தபோது இருந்ததாக எனக்குத் தோன்றிய சிறு இறுக்கமும் இப்பொழுது இல்லை. முற்றிலும் இயல்பாக தோழமையோடு இருந்தீர்கள். இளைய வாசகர்களும் ஜெயமோகன், ஜெயமோகனென்று உங்களைச் சுற்றி குழைந்துவந்தார்கள். வெள்ளை மாளிகைக்கு அருகில் வாசிங்டன் கோபுர புல் வெளியில், மாலை வேளையில் அனைவரும் ஊர்ச் சுற்றி களைப்பாக அமர்ந்த போது நீங்கள் சட்டென்று உலகின் மறுகோடியில் அமர்ந்திருப்பதை எண்ணி சிலிர்ப்படைந்தீர்கள். நாங்களும் ஒருகணம் எங்கள் வேற்களைத் தமிழ் நாட்டில் வைத்துவிட்டு இங்கிருப்பதை உணர்ந்தோம். பிறகு இருட்டும் வரை பலவற்றை பகிர்ந்துகொண்டீர்கள். ஒரு பேராசிரியரிடம் அமந்து கற்றுக்கொண்ட அனுபவம்.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் நீங்கள் வாசகர்களுடன் நடத்திய கலந்துரையாடல். திருக்குறள், ஆன்மீகம், மதம், பண்பாட்டு வளர்ச்சி, தமிழ்க் கல்வி, தரம், உலகத் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு மொழியைக்கடத்துதல், தமிழ் அறிஞர்களை அடையாளப்படுத்துதல் என்று பரந்துபட்ட கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டீர்கள்.

இம்மாத பன்நாட்டு வலைத்தமிழ் இதழில் அனைவரும் படித்துப் பயன்பெற திருக்குறள் சார்ந்த

விவாதங்களைத் தொகுத்துள்ளோம்.

To read as a book: https://issuu.com/valaitamil/docs/valaitamil-magazine-oct-2019

To go from ValaiTamil Magazine Page: http://www.valaitamil.com/magazine.php

To download: https://drive.google.com/open?id=1o8nmZAVsXGu0qABISqm6I7eVTCWxJkbx

காணொளி:

நன்றி.

விஜய் சத்தியா

வாசிங்டன்

***

முந்தைய கட்டுரைபூமணியை தொடர்தல்…
அடுத்த கட்டுரைமொழி- எல்லைகளும் வாய்ப்புகளும்