உலோகம்- பாதி விலையில்! – பத்ரி சேஷாத்ரி

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் உலோகம் நாவல் அதிவேகமாக விற்பனை ஆகியது. மிகக் குறைந்த பிரதிகளே (600) அச்சிட்டிருந்தோம். அதன் விலை ரூ. 100 என்று இருந்தது. அனைத்தும் புத்தகக் கண்காட்சியிலேயே விற்றுவிட்டன. கடைகளுக்குப் போகவே இல்லை.

இதன் விற்பனை வேகத்தைப் பார்த்து, இந்தப் புத்தகத்தை 5,000 பிரதிகள் அச்சிட்டுள்ளோம். விலையையும் ரூ. 50 என்று குறைத்துள்ளோம். அதே தாள், அதே தரம். விலை மட்டும்தான் பாதிக்குப் பாதி! ஏற்கெனவே தமிழகம் எங்கும் உள்ள கடைகளிலிருந்து மொத்தம் 5,000 பிரதிகளுக்குமாக ஆர்டர்கள் வந்துவிட்டன. அடுத்த நான்கு நாட்களுக்குள் பிரதிகள் அனைத்துக் கடைகளுக்கும் அனுப்பப்பட்டுவிடும். புத்தகக் கடைகள்முதல் தெருமுனைக் கடைகள்வரை எங்கும் கிடைக்கும். ஒரே மாதத்தில் 5,000-மும் விற்றுவிடும் என்கிறார்கள் எங்கள் விற்பனைத் துறையினர்.

பின்னர் விலை ஏறலாம். எனவே இந்த விலைக்கு இந்தப் புத்தகத்தை வாங்கவேண்டும் என்றால் இப்போதே கடைகளை அணுகி, புத்தகத்தை முன்பதிவு செய்து வாங்கிவிடுங்கள்

பத்ரி சேஷாத்ரி [கிழக்கு]


இணையத்தில் வாங்க

முந்தைய கட்டுரைமயில்கழுத்து [சிறுகதை] – 2
அடுத்த கட்டுரைபுது எழுத்துக்கு விருது