மதிப்பிற்குரிய ஜெ,
என் அப்பா வழி தாத்தா அடிக்கடி அழுவதுண்டு (when listening to music \ when playing with small children) அதனால் தான் நான் கூட உங்கள் கதை படித்ததும் அழுதுவிடுகிறேன் என்று நினைதுக்கொண்டிருந்தேன் ஆனால் பெரும்பாலானோர் ஏன் உங்கள் கதை படித்ததும் அழுகிறார்கள்? ஒருவேளை நீங்கள் எழுதியது போல் (in யானை டாக்டர் சிறுகதை), நல்ல விழயங்கள் அந்தரங்கத்தில் உறையும் நல்லியல்பை சென்று தீண்டும் போது தான் கண்ணீர் வருகிறதோ?
//பெரும் இலட்சியவாதம் மனிதர்களின் அந்தரங்கத்தில் உறையும் நல்லியல்பை சென்று தீண்டும் என்று நினைத்தேன். காந்தியின் வலிமை அங்குதான். அத்தனை இலட்சியவாதங்களும் வாழ்வது அந்த அம்சத்தை பயன்படுத்திக்கொண்டுதான்.
Thanks,
Sriram Kameswaran
அன்புள்ள ஸ்ரீராம்
பொதுவாக லௌகீகவாதிகள் உயர் இலட்சியங்களுக்காக அழுவதில்லை. வயதாகும்போது மனிதர்கள் லௌகீகம் விட்டு விலகுகிறார்கள். அவர்களின் ஒருசாரார் உயர் நோக்கிச் செல்கிறார்கள். அவர்கள் அழுவது சாதாரணம்.
தோட்டிகள் சங்கம் அமைத்து ஓர் ஊர்வலம் போவதைக்கண்டு ஜீவா அழுததை ஒருமுறை ஒரு நண்பர் சொன்னார்.
ஜெ
Dear Sir
A truly amazing story.
Your words about pain remind of Ramana Maharishi’s life.
Man , a vain insect – these words really hit us with a plain truth
which we never realise.
A totally new perspective on how we see animals and their lives.
Simply unputdownable or unexitable
I am sure your critics will have no answer for this story.
RANGANATHAN
அன்புள்ள ஜெயமோகன்,
காலையில் தினமும் நீரிழிவுப்பசியைப் பொறுத்துக் கொண்டு எப்படியும் கதைகளை வாசிக்கிறேன்.என்ன சொல்ல இருக்கிறது, ஜெயண்ட் மோகன்.
அன்புடன்
கலாப்ரியா
அன்புள்ள கலாப்ரியா
உங்கள் வாழ்த்து ஓர் ஆசியும்கூட. நன்றி
நீரிழிவுப்பசியை கலோரி இல்லாத ஒன்றால் அடக்கி சின்ன உடற்பயிற்சிகள் செய்யவேண்டும் என்பதே மரபு…
ஜெ
ஜெ,
யானைடாக்டர் வாசித்தேன். உங்களுடைய குழுமத்திலே அதைப்பற்றி நிறைய கடிதங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். என்னால் வாசிக்க முடியவில்லை.
யானைடாக்டர் கதை பல இடங்களிலாக தொட்டுத் தொட்டு செல்லும் இடங்கள் முக்கியமானவை. பல வரிகளை தனியாக குறித்து வைத்துக்கொண்டேன் நினைவில் நிறுத்துவதற்காக. டாக்டர் கடைசியில் அதிகாரத்தைப் பற்றி சொல்வது மிக முக்கியமானது. சேவை செய்ய விரும்பக்கூடியவன் முதலில் உதற வேண்டியது அதிகார ஆசைதான். ஆனால் மனிதர்களால் அதை எளிதிலே செய்துவிடமுடியாது. எனக்கும் அப்படித்தான்.
காட்டில் ‘நவநாகரீக’ மனிதர்கள் நடந்துகொள்ளும் முறையைப்பற்றி நானும் கவனித்திருக்கிறேன். வெஸ்டர்ன் கேச்மெண்ட் பகுதிக்கு போவதாக இருந்தால் ஒரு சின்ன காகிதம் கூட நம்மிடம் இல்லாமல் சோதனை செய்து அனுப்புவார்கள். ஆனால் அங்கே போனால் ஒரே பாட்டிலாக கிடக்கும் கேட்டால் எம்.எல்.ஏ மினிஸ்டர்கள் நீதிபதிகள் அவர்களின் உறவினர்கள் வந்து குடிக்கிறார்கள் , அவர்களிடம் கேட்கவே முடியாது என்கிறார்கள். சமீபத்தில் சென்னையை சேர்ந்த நீதிபதிகள் வெஸ்டர்ன் கேகள்
நாம் நாகரீக மனிதர்கள் அல்ல ‘வெய்ன் இன்செக்ட்ஸ்’
சிவராமன்