கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ சார் அவர்களுக்கு,

ஜூன் 20 , 2009 நீங்கள் எழுதிய மீசை கட்டுரையை படித்தேன். சார், இப்பொழுது நீங்கள் தியோடர் பாஸ்கரன் அல்லது ஜெயகாந்தன் போல் மீசை வைக்கலாம் இல்லையா? உங்களை நேரில் மீசையுடன் பார்த்ததில்லை அனால் உங்களை முதல் முறை பார்க்க வரும்போது மீசையுடைய ஜெயமோகனைக் கற்பனை செய்து வந்து ஏமாந்தேன். வணங்கான் கதாசிரியரை மீசைல்லாமல் வரும்கால வாசகர்கள் எப்படிக் கற்பனைசெயவார்கள்?

இப்படிக்கு உங்களை பெரிய முறுக்கு மீசையுடன் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் அன்புள்ள
பார்த்திபன்

அன்புள்ள பார்த்திபன்

பார்ப்போம். அந்த மீசையை சுமக்கும் அளவுக்கு உடம்பை தேற்றிக்கொள்ள வேண்டும். வயதான யானைகளுக்கு கொம்பு மிகப்பெரிதாக இருக்கும். அதனால் சுமக்க முடியாது. ஆகவே வெட்டிவிடுவார்கள். அதைப்போல ஆகக்கூடாதல்லவா?

ஜெ

 

சார்,

வணக்கம். தங்களது மதிப்புமிக்க நேரத்தை அறிந்து கொள்கிறேன்.ஆகையால் மிகுந்த தயக்கத்திற்கு பிறகே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் அறம் கதையைப் படித்து நான் ஒரு அரை மணிநேரம் அழுதிருப்பேன்.நான் அழுததை போலவே அக்கதையை படித்த பலரும் அழுதுவிட்டதாக அவர்களின் கடிதத்தை வைத்து அறிந்துகொண்டேன்.

என் சந்தேகம் என்னவென்றால் டி வி சீரியல் பார்ப்பவர்களும் கூட அழுகிறார்கள். அல்லது பாசமலர் போன்ற படங்களை பார்ப்பவர்களும் அழுகிறார்கள். அப்படி அவர்கள் அழுவதற்கும் அறம் மாதிரியான தீவிர இலக்கியத்தை படித்து அழுவதற்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?. அல்லது இரண்டு அழுகையும் ஒன்றுதான?. கொஞ்சம் விளக்கமுடியுமா? நேரம் இருந்தால் மட்டும். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

அன்புடன்
ஆதவன்.

 

ஜெ பதில் : கண்ணீரும் கதைகளும்

முந்தைய கட்டுரைசிந்தனையை வரைதல்
அடுத்த கட்டுரைகாந்தியைப் பற்றிய அவதூறுகள்