நீலவானும் மண்ணும்

பனிமலையில்

பாடல்களைக் கேட்கையில் காட்சிவடிவத்தை நான் அரிதாகவே பார்க்கிறேன். அவை பெரும்பாலும் என்னுள் எழும் காட்சிகளை விடக்குறைவாக, மிகத்தொலைவாகவே இருக்கின்றன. ஆனால் ஹம்ராஸ் படத்தின் இமையமலைக் காட்சிகள் பல நினைவுகளை எழுப்புபவை. நான் கண்ட இமையமலைக்காட்சிகள். ஒளிரும் நீரோடைகள். பனிமலைகள்.

ஆனால் மகேந்திர கபூர் அவரே மேடையில் பாடும் இந்தப்பாடல் ‘ஹே நீல் ககன் கி தலே’ இன்னொருவகை அனுபவமாக இருந்தது. திரையில் ஒலிக்கும் வடிவின் பெரிய அளவிலான பின்னிசை ஏதுமில்லை. அவருடைய குரலை இன்னும் அணுக்கமாகக் கேட்க முடிகிறது. அதைவிட அவருடைய முகபாவனைகள். அதில் அந்த இசைக்கும் உணர்ச்சிகளுக்கும் அவர் தன்னை ஒப்புக்கொடுக்கும் விதம். எந்தப்பாவனையும் இல்லை. அந்த உணர்வுகள் என்னை ஆட்கொண்டன

2014ல் வலையேற்றியிருக்கிறார்கள். அவர் 2008ல் மறைந்தார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்டிருக்கலாம். மூல வடிவம் பாடப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்குப்பின். அவர் குரல் அப்படியேதான் இருக்கிறது. அந்த உணர்ச்சிகளும்.

***

முந்தைய கட்டுரைபகடி எழுத்து – காளிப்பிரசாத்
அடுத்த கட்டுரைசிவப்பயல் -கடிதங்கள்