வீடு -கடிதங்கள்

வீடு நமக்கு…

அன்புள்ள ஜெ

 

சில குறுகிய கட்டுரைகள் உங்கள் தளத்தில் ஆழமான மனப்பதிவுகளை உருவாக்கிவிடுகின்றன. அதிலொன்று வீடுநமக்கு. அந்தப்பாடல் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். ஆனால் வீடு ஓடு போன்ற சொற்களுக்கு இப்படி விரிவான அர்த்தம் கொள்ளமுடியும் என்று தோன்றியதே இல்லை

 

சித்தர்பாடல்களை வரிக்குவரி குறியீட்டு அர்த்தம்தான் கொள்ளவேண்டும் என்று கேட்டிருக்கிறேன். ஆனாலும் இப்படி ஒரு வாசிப்பை நடத்த நமக்கு ஒரு தொடக்கம் தேவைப்படுகிறது

 

மருதுபாண்டியன்

 

அன்புள்ள ஜெ

 

வீடுநமக்கு என்னும் கட்டுரை அழகானது. இப்படி ஒவ்வொரு ஊரிலும் பல சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். தமிழகம் முழுக்க கணக்கிட்டால் பல்லாயிரம்பேர் இருந்திருப்பார்கள். அவர்களின் சமாதிகளில் சிலவே கவனிக்கப்படுகின்றன. என்ன பிரச்சினை என்றால் ஒரு சித்தரின் சமாதிக்குச் சென்றால் இன்னின்ன உலகியல் நன்மைகள் விளையும் என்று சொன்னால்மட்டுமே நம்மவர் செல்கிறார்கள். சித்தர்கள் வீடு நமக்கு காடு என வாழ்ந்தவர்கள். நம்மவர் காட்டுக்குச் சென்று வீடு வீடு என வேண்டிக்கொள்கிறார்கள்

 

ஆர்.குமார்

 

 

அன்புள்ள ஜெ

 

வீடு நமக்கு நல்ல கட்டுரை. உங்கள் கட்டுரை வழியாக இடத்தைச் சென்று பார்த்தேன். அழகான சூழல். ஆனால் இன்னும் ஆறுமாசம்தான் அப்படி இருக்கும் என நினைக்கிறேன். கோயிலாக ஆனால் ஆலமரம் பாதுகாக்கப்படும்.

 

ராஜ்

 

 

முந்தைய கட்டுரைவெள்ளிநிலம்- கடிதம்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனும் சாதியும்