வேண்டுதல் நிறைவு

ஒரு வேண்டுதல்

உயிராபத்து நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி முருகசாமி அய்யா, தனது உடல்நலத்தில் தேறுதலடைந்து உள்நோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். மருத்துவமனை வாசலில் கண்ணீர்காயாத விழிகளோடு துக்கம்சுமந்து நின்ற அந்த காதுகேளாத, வாய்பேசாத பிள்ளைகளின் வேண்டுதலும் தவிப்பும் தான் இந்த நிம்மதிப்பெருமூச்சை நமக்களித்துள்ளது.

அய்யாவின் குணமடைதலைக் கேள்விப்பட்டு, அழைத்துக்கேட்கும் அத்தனை இருதயங்களையும், துவக்கநாள் தொட்டுப் பிரார்த்தனைகளால் இறைதொழுத நம்பிக்கை மனங்களையும் கைகூப்பி பாதம் தொழுகிறோம். அனைத்துவகையிலும் உடன்நின்ற நண்பர்களை நெஞ்சணைத்துக் கொள்கிறோம்.

முழுமையான நலம்பெற தொடர்ந்த சிகிச்சை அவசியமாகிறது

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

***

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி

திருப்பூர் குற்றச்சாட்டு -நம் அறமும் குடும்பமும்

ஒரு குற்றச்சாட்டு

திருப்பூர், கொற்றவை- கடிதம்

முந்தைய கட்டுரைஊட்டி, அபி, இளவெயில், குளிர்
அடுத்த கட்டுரையுவன் சந்திரசேகரின் ‘கானல்நதி’- கலைச்செல்வி