அபி கவிதைகள் நூல்

 

அவரது அனுபவநிலை அருத்திரண்டது. சூன்யமானது. காலமற்றது.  தத்துவச் சுமையில்லாதது.  வலியில்லாதது.  நான் – இல்லாத ஒரு வாழ்க்கை அது. இதை நிரூபிக்கும் ஓர் அகப்பயணத்தை அவர் தம் கவிதைகளில் இயற்றுகிறார். அக உலகிற்குள் சொற்களுள் நடக்கும் நாடகத்தை அபியைப் போல் எழுதுவதற்கு ஒருவர் மெய்ம்மையுணர்ந்தோனாக இருத்தல் வேண்டும்.

-தேவதேவன்

 

 

அன்பார்ந்த ஜெயமோகனுக்கு,

 

வணக்கம்

 

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கவிருப்பது குறித்த செய்தியறிந்து மகிழ்கிறோம்.அபி கவிதைகள் மூன்றாம் பதிப்பு, அதாவது புதிய பதிப்பு நேற்று விற்பனைக்கு வந்திருக்கிறது.சிறப்பாக அடையாளம் வெளியிட்டு இருக்கிறது. அதன் பிரதி ஒன்றை உங்களுக்கு அனுப்புகிறோம்.

 

உங்கள் தளத்தில் பலரும் எங்குக் கிடைக்குமெனக் கேட்டுள்ளனர்.தேவையுள்ளோரை பின்வரும் முகவரியில் தொடர்புகொள்ளச் செய்யலாம்:

 

 

அபி கவிதைகள்

விலை ரூ 220

 

வெளியீடு:

அடையாளம்

1205/1 கருப்பூர் சாலை

புத்தாநத்தம் 621310, திருச்சி மாவட்டம்

தொடர்பு எண்கள்: 944 37 68004, 04332 273444

மின்னஞ்சல்: [email protected]

முந்தைய கட்டுரைவீடு நமக்கு…
அடுத்த கட்டுரைஇந்தியன்- 2,கதை