மோடியும் முதலையும் -கடிதங்கள்-3

மோடியும் முதலையும் -கடிதங்கள்-2

 

அன்பின் ஜெ..

ரத்தன் அவர்களின் கடிதம் கண்டேன்.

சூழல் விதிகளைத் தளர்த்தி, தேசிய வனவிலங்குப் பூங்காக்களுக்குள் சாலைகளுக்கும் தொழிற்திட்டங்களுக்கும் அனுமதி கொடுத்து விட்டு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, கானுயிர்க் காவலராக அவதாரம் எடுத்த அபத்தத்தை மட்டுமே சுட்டி எழுதியிருந்தேன். அதுவும் நீங்கள் எழுதிய முதலை மோடிக்கான எதிர்வினையாக மட்டுமே.

எனவே, சூரிய ஒளிச் சக்தி, பேட்டரி கார், டெஸ்லா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்வச் பாரத் எல்லாமே அவுட் ஆஃப் சிலபஸ் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். காற்று வழி மின்சாரம் வந்து 25 ஆண்டுகளாகிவிட்டன என்றும்.

அன்புடன்

பாலா

பி.கு: லிங்கராஜ் அவர்களின் கார்த் தொழில் அலசல் படித்தேன்.  மோட்டார் சைக்கிள் விற்பனை வீழ்ச்சி பற்றியும் எழுதுவார் என எதிர்பார்க்கிறேன். சில நாட்கள் முன்பு ப்ரிட்டானியா மேலாண் இயக்குநர் வருண் பெர்ரி, 5 ரூபாய் பிஸ்கட் விற்பனை வீழ்கிறது என அழுதிருந்தார். இன்று பார்லே பத்தாயிரம் பேரை வேலையிலிருந்து நிறுத்திவிடப் போவதாகச் செய்திகள் வந்துள்ளன. 5 ரூபாய் பிஸ்கட் வாங்கி உண்பவர் இப்போது என்ன உணவுக்கு மாறியிருப்பார் என யோசித்து, சரி..எங்க ஊரில் தவுட்டு பிஸ்கோத்து விலைகுறைவாகக் கிடைக்கக் கூடும் என ஆசுவாசம் அடைந்தேன். ஆனால், ஆண்களின் உள்ளாடை விற்பனை வீழ்ச்சி உண்மையிலேயே பீதி அளிக்கிறது. முருகா.. ஏதாவது பார்த்துச் செய்யும் என வேண்டிக் கொள்கிறேன்.

 

மோடியும் முதலையும் -கடிதங்கள்

முதலை மோடி

மோடி,முதலை -கடிதம்

மோடி, முதலை,முதலீடு

 

முந்தைய கட்டுரைகாந்தியைக் கற்கவேண்டிய வயது
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் – ஒரு கடிதம்