மோடியும் முதலையும் -கடிதங்கள்-2

மோடியும் முதலையும் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ

தற்போதைய பொருளாதார நிலையைக் குழப்பத்தோடு பார்த்து வரும் மோடி ஆதரவாளர்களின் நானும் ஒருவன்.. அனால் சில கேள்விகள்:

1) “வரிக்கட்டுப்பாடுகள் மூலம் நிலமுதலீட்டை இறுக்கிவிடடார்கள்” – இதில் என்ன செய்ய வேண்டும்.. எல்லாரும் வரி ஏய்ப்பு செய்வதால் அதை அப்படியே விட்டு விட வேண்டுமா ?

2) இந்த அரசாங்கம் சூரிய,காற்று மின்சாரத்திலும், பாட்டரி வாகனத்திலும் காட்டும் அக்கறையை எந்த விதத்தில் கண்டுகொள்வது ? அதை ஒரு வரியெனும் சுட்டி காட்டாமல், பாலா போன்றவர்கள் பேசுவது மொத்த வாதத்தையும் ஒருபட்சமாகி விடாதா ?

நன்றி

ரத்தன்

***

அன்பு ஜெ

பாலாவின் கடிதம் தொடர்ந்து வந்தவையின் ஒரு நீட்சியாக எழுதுகிறேன்.

கடந்த 9 மாதங்களாக, வாகன (இரண்டு மற்றும் நான்கு சக்கர, கனரக) விற்பனை சரிவு என்பது பயமுறுத்தும் அறிகுறியாக காணப்படுகிறது. அதுவும் 4 மாதங்களில் கிட்டதட்ட 20, 17, 30% என வீழ்ச்சி (போன வருடத்தின் இதே மாதங்களில் ஒப்பீட்டில்) இந்த ஆட்டோமொபைல் துறை பங்களிப்பு என்பது, மொத்த உற்பத்தியின் (manufacturing) கிட்டதட்ட பாதி என்பதாக படிக்கிறேன். இதில் Passenger Vehicles பிரிவு மட்டும் (ஏப்ரல் முதல் ஜுன்19 வரை) 18.42 சதவீதம் வீழ்ச்சி என்றும் ஜுலை கிட்டதட்ட 30% எனவும் தகவல். இது கண்டிப்பாக கவலை தருவது. கார் என்பது பணத்தின் செலவழிப்பில் அல்லது வாங்குதலின் உச்சங்களில் ஒன்று. அதே சமயம் இந்த விற்பனை சரிவு வேறு வடிவில் (சிறு அளவிலேனும்) மடை மாறி இருக்கிறதா என்ற தகவல் எளிதில் கிடைக்கவில்லை. சாமனியன் பார்வையாக இதை நான் யோசித்து கொள்கிறேன்

  1. Used cars – மாருதியின் True Value எனப்படும் மொத்த கடைகளில் stand alone கடைகள் மட்டும் 250ஆக ஏற்றம் கொண்டுள்ளன (2020க்குள் 300 என்பது அவரகளின் இலக்கு). மொத்த எண்ணிக்கை 800க்கு மேல் உள்ளன. ஆகஸ்ட் 2017ல் இந்த பிரிவை தனியாக என ஆன பிறகு ஏறக்குறைய 8 லட்சம் கார்கள் விற்பனை ஆகி உள்ளன என்று படிக்கிறேன். இதே போல் சில வருடம் முன்பு இருந்த 500 கடைகள் 2020க்குள் 1800 வரை என மஹிந்த்ரா இலக்கு, ( second hand கார் பிரிவில் இவர்கள் அனைத்து ப்ராண்ட் விற்பனை செய்பவர்கள் ). இது போக கண்ணில் படும் unorganized வகையினர் பெரிய ஷோரூம்களில் நடக்கும் விற்பனை. இந்த பிரிவின் கீழ் நடக்கும் விற்பனை வளர்ச்சி சம்பந்தப்பட்ட தகவல் எதுவும் எந்த செய்திகளிலும் தளத்திலும் (தோராயமான புள்ளி விவரம்) கிடைப்பதில்லை.
  2. பேங்க் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் போன்ற வகையினரிடம் கடன் எளிதாக கிடைத்ததால் நடந்த ஜேரான விற்பனை போன வருடம் பாதி முதல் கடினமாகி விட்டது. ILFS என்கிற விஷயத்தில் மாட்டிக்கொண்ட வங்கிகளின் கடன் பிரச்சனை, வங்கி வகையில் வராத Non banking finance companiesகளுக்கு பெரிய இடர் ஏற்படுத்தி, இன்னமும் அதன் பாதிப்பு தொடர்கிறது. இது தான் மொத்தமாக பெரிய காரணமாக சொல்லப்படுகிறது.
  3. முக்கிய மெட்ரோ மற்றும் B,C நகரங்களில் நடக்கும் uber, ola போன்ற வகையினரின் வருமான வளர்ச்சியின் தகவல்களும் கிடைப்பதில்லை. இந்த நிறுவனங்களுக்காக ஒடும் ஒரு கார், எவ்வளவு தூரம் புதிய கார் வாங்குபவரின் முடிவுகளை தள்ளி போட வைத்தன என்பதும் கவனிக்க வேண்டியவை. இந்த கார்களின் உபயோகம் கண்டிப்பாக (இது போன்ற நெருக்கடிகளிலாவது) புது கார் வாங்கும் முடிவை (தனி நபர் மற்றும் நிறுவன கொள்முதல்).தள்ளி வைக்க அல்லது நிராகரிக்க வைக்கும் என் நிறுவனத்திற்கு கார்கள் வாங்குவதா? அல்லது uberஆ எனில் இரண்டாம் முடிவு எளிது. பொருள் வாங்குவதை காட்டிலும் அதன் சேவையை உபயோகித்தல் முறை வந்து பல வருடம் ஆகி விட்டன.ஒரு கார் எனும் சேவையின் தாக்கம் எத்தனை காரின் விற்பனையை பாதிக்கும் என என ஆய்வு தகவல் இல்லை
  4. இந்த வகை ola, uber இல்லாத நகரங்களில் Cabs எனப்படும் வாடகை கார்கள் வாங்கி ஒட்டும் டிரைவர்களின் ஒரு பெரும் பகுதி தேங்கி, acting driverக்கான தடத்தில் நீர்த்து போய் விட்டன என எனக்கு படுகிறது. ஒரு வண்டி ஒட்டி கொண்டு இருக்கும் டிரைவர், மறு வண்டி வாங்க பெரும் தடை, வாடகை கிடைத்து அதில் காரின் காசை அடைப்பதிலும் வருமானம் சம்பாதிப்பதிலும் உள்ள சரிவும் சிக்கலும் முக்கிய காரணம். (போததற்கு ஏற்றமாகி போன இன்சுரன்ஸ் FC தொகை) சீசன் இல்லாத நாட்களில் கார் ஸ்டாண்ட் சென்று பார்த்தால் தெரியும். தனியார் வண்டிகளுக்கு acting driver தான் அவர்களுக்கு ஒரு தற்காலிக ஆறுதல். படிப்படியாக குறைந்தாலும், கடன் கிடைக்க இருக்கும் நெருக்குதல் காரணமாக, இந்த பழைய மாடலான “வாடகை கார்கள்” எனும் ஒரு வாங்கும் பகுதி இந்த சில மாதங்களில் குறைந்து போய் இருக்கும் என்பதாக யோசிக்கிறேன்.
  5. கிராமிய, விவசாயம் சார்ந்த ஊர்களில் இருக்கும் தேக்கம் ஆரம்ப கட்ட மாடல்களின் வியாபார சரிவுக்கு முக்கியம்.
  6. சமீபமாக ஏற்றி வைத்த registration போன்ற செலவினங்கள் என்பது கடைசி ஆணியா என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். இது தவிர, பெரிய அளவில் சவுதி எண்ணெய் கம்பெனி இங்கு reliance உடனும் அரசின் ஆயில் கம்பெனிகளுடன் முத்லீடு ஆரம்பிக்கும் இந்த வேளைகளிலும்,electric வாகன லட்சியங்கள் வேறு அவ்வப்போது பயமுறுத்தும்.
  7. BS6க்கு ஏப்ரல்2020ல் மாறுதல் என்பது எவ்வகையில் அதற்கு முந்தைய மாதங்களில் விற்பனையை பாதிக்கும் என்பது ஒரு கோணம். வாங்குபவன் BS4 மாடல்களை சலுகையில் வாங்கலாம் எனும் போது வரும் மாதங்களிலும் பெரிதாக விற்பனை வருமா எனும் சந்தேகங்கள் கூட ஒட்டிக்கொள்கின்றன. ( BS6 2020 ஏப்ரலில் அறிமுகம் ஆகும் என்று சொல்லி 2 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. 2020ல் ஏப்ரல் வரை அறிமுகமாகது என்றாலும் அவை வரும் போது விலை அதிகமாகி விற்பனை சரியும் என்ற துல்லிய எதிர்பார்ப்புகளில் கம்பெனிகள் உறுதியாக இருப்பார்கள் )

மேலே சொன்ன இவை எல்லாம் விற்பனை சரிவின் காரணங்களாக வாய்ப்பு உள்ளது என்பதாக இருந்தாலு சரிவை ஈடு கட்ட தான் தெரியவில்லை. மேலே சொன்னவை நுகர்வின் ஒரு பொருளாக கார் என்பதில் நான் யோசித்தவை. ஆனால், நாட்டின் பொருளாதாரத்தில் கன ரக வாகனங்களின் விற்பனை ஒரு நல்ல அளவுகோல் என்று சொல்கிறார்கள். இவை காரின் சரிவு அளவுக்கு தாழவில்லை எனினும் கவலை பட வைக்கும் அளவு தாண்டி விட்டது

வாங்கு வாங்கு என்று தள்ளப்படும் எந்த நுகர்வு சந்தை வியாபாரமும் வளர்ந்தபடி எகிறி சென்று கொண்டே இருக்க முடியுமா? Consolidation / correction ஆகிறதா இல்லை சரிந்து பள்ளதாக்கை நோக்கி செல்கிறதா என்று தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்க, நமது முழு நேர முதல் பெண் நிதி அமைச்சரின் முதல் பட்ஜெட் குத்திய குத்தில் அனைத்தும் பலூன்களும் சொங்கி கிடக்கின்றன. பயத்தின் முட்கள் தொட தொடங்கி கத்தியின் கூர்மை மிக அருகில் என தொழில் செய்வோர் குழப்பத்தில் இருக்க, அம்மையார் பட்ஜெட்டில் மோடி புகழ் பாடி, தமிழில் நிதி நிர்வாகம் உதாராணம் காட்டி, தண்ணீர் மிடறு அருந்தாமல் முடித்த வைத்த பட்ஜெட் சூட்டின் வெம்மை தாள இயலாமல், போன வாரம் முழுக்க கட்டுமான, வாகன, வங்கி மற்றும் துறை சார்ந்த, சிறுகுறு வணிகம் சார்ந்த, capital markets என எல்லா முக்கிய துறைகளிலும் மீட்டிங் முடித்து விட்டார் ( கவனிக்க – பட்ஜெட் முடித்து ) இவைகளை மாண்புமிகு பிரதமருக்கு பகிர, வரும் வார இறுதிக்குள் அவர் ரட்சகன் என கையில் மந்திர கோளுடன் வருவார் என்று பெரும்பாலான துறையினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அதாவது போன வருடம் முதலே ஒழுக துவங்கிய அண்டாவுக்கு தற்போது பட்ஜெட் முடிந்த பின் பூச்சு. அதனால் இந்த கம்பெனி பாணி அரசாங்கத்திடம் மக்களின் அரசாங்கம் போல இந்த சூழல்-காடு-புலி-ஆறு காத்தல் – கல்வியை மாநிலங்களின் கையில் விடுவது – அடித்தட்டு மக்கள்/சமூகத்தின் inclusion என்கிற வகை கனவுகளை பூட்டி வைத்து விட்டேன்.

போதாதென்று மறுபுறம் உலக மயமாகல் முடிந்து போனதோ என்கிறதாக localization and protectionism நோக்கி ட்ரம்ப் அய்யா தாளித்தலின் காரம் பரவி இருமல் நின்று கொல்கிறது. அப்பாடா என்று நல்ல காற்று நெஞ்சு நிறைக்கும் போது ஈரான், சீனா அல்லது ஏதேனும் நாடு மேல் ஒரு ட்விட் வரும்

எவை மாறியும் அழிந்தும் எவை வருகின்றன, வந்து என்னவாக ஆகின்றன என தெரியாததால் நாளை எனும் நாளை நம்பிக்கையுடன் பார்த்து கொள்கிறேன்

லிங்கராஜ்]

***

முந்தைய கட்டுரைவாழ்விலே ஒருமுறை
அடுத்த கட்டுரைமுகில்செய்தி