ஆயிரமாண்டு சைக்கிள் -கடிதம்

 

ஆயிரம் ஆண்டு சைக்கிள்

டாக்டர் மா இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தை நிறுவி நடத்திவரும் கண் மருத்துவர் இரா கலைக்கோவன் 1980 இல் தற்செயலாக உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் தூண் சைக்கிளை பார்த்திருக்கிறார். கோச்செங்கணான் காலக் கோயிலில் சைக்கிளா என்ற புதிரில் சிக்கிய அவரை வரலாற்று ஆய்வு உள்ளிழுத்துக்கொண்டது. அவர் கருத்து, 1920 களில் கோயில் புத்தாக்கம் செய்யப்பட்டபோது சிற்பி புதுவரவான சைக்கிளை தூணில் செதுக்கிவைத்திருக்கலாம் என்பதே. இப்படி இந்த சைக்கிள் ஒரு கண் மருத்துவரை வரலாற்று ஆய்வாளராக்கி அவர் மூலம் மேலும் பல வரலாற்று ஆய்வாளர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது.

 

தி ஹிந்து செய்தி: https://www.thehindu.com/features/metroplus/bringing-the-past-to-the-present/article7310014.ece

 

 

பா ராஜேந்திரன்

 

சரிதான் இந்த உலகத்துக்கு இணை சொல்ல எதுவுமே இல்லை. ராஜராஜேஸ்வரம் கோவில் ஏலியன் டெக்னாலஜி கொண்டு முப்பதடி உயர ஏலியன்கள் அறுநூறு பேரைக்கொண்டு கட்டப்பட்டது.  ஓம் எனும் மந்திர ஒலி கொண்டு  அப்படியே அந்தரத்தில் மிதக்க வைக்கப்பட்டு விமானத்தில் பதிக்கப்பட்டது அதன் கிரீடம்.

ஆதாரம்
கொஞ்சம் தேடினால் ராஜராஜன் ஒரு வேற்றுகிரக வாசி எனும் உண்மையை கண்டுபிடுத்து விடுவேன் என நினைக்கிறேன்.  :)
கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56
அடுத்த கட்டுரைகிருஷ்ணப்பருந்து- கடிதங்கள்