முகில்செய்தி

அஷ்டபதியில் எனக்குப் பிடித்த முதல் ஐந்து பாடல்களில் ஒன்று  “பிரியே சாருசீலே!” அதன் பல்வேறு அழகிய வடிவங்கள் இணையத்தில் உள்ளன. ஆனால் தெலுங்குப்படமான மேகசந்தேசத்தில் உள்ள இந்தப்பாடல் மிக அணுக்கமானது. முற்றிலும் வேறுபட்ட ராகம். ஆனால் அதன் சொற்களிலுள்ள உண்மையான கொஞ்சல் இந்த மெட்டில் சரியாக அமைந்திருக்கிறது ஆனால் பாதிக்குமேல் தெலுங்குப்பாடல்.

இசையமைப்பாளரான பி.ரமேஷ் நாயிடு [ Pasupuleti Ramesh Naidu]   இந்தப்படத்திற்காக தேசிய விருது பெற்றார். நாகேஸ்வரராவ் இதில் கவிஞர். ஜெயசுதா அன்பான ஆனால் ரசனையற்ற கிராமத்து மனைவி. ஜெயப்ரதா ரசனை மிகுந்த அழகிய தாசிப்பெண். இருபெண்களிடையே அலைமோதிய கவிஞர் இறுதியில் தன் கவிதைகளைவிட்டுவிட்டு மறைகிறார்.

இசை   ரமேஷ் நாயிடு

பாடியவர்கள் ஜேசுதாஸ், பி.சுசீலா

பிரியே சாருசீலே முஞ்ச மயிமானமனிதானம்

சபதி மதனானலோ தஹதி மம மானசம்

தேஹி முக கமல மதுபானம்

ப்ரியே சாருலீலே

 

வடஸி யதி கிம்சிதபி தந்தருசி கௌமுதி

ஹரதி தரதிமிரமதிஹோரம்

ஸ்புரததரஸீதவே தவ வதன சந்த்ரமா

ரோசயது லோசனசகோரம்

 

[ரமேஷ் நாயிடு]

ரமேஷ் நாயிடு [1933-1987] ஆந்திரத்தின் ஒரு தொன்மம் போல பேசப்படும் இசையமைப்பாளர். ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் கொண்டப்பள்ளியில் பிறந்தார். பண்ட்வால் பஹிஜா என்னும் மராத்திப்படத்திற்கு முதலில் இசையமைத்தார் தெலுங்குப் படங்களில் இசையமைத்தவர் பெருநிறுவனங்களில் தலைவணங்க முடியாமல் விலகிக்கொண்டு ஒரிய, வங்க,நேபாளி படங்களுக்கு இசையமைத்தார். ஒரு வங்கப்பெண்ணை மணந்துகொண்டார். 1972ல் தான் மீண்டும் தெலுங்குக்கு வந்தார். அத்தனை இசைக்கருவிகளையும் வாசிக்கத்தெரிந்தவர் என அவரைப்பற்றிச் சொல்கிறார்கள். ஒருவகையான முசுட்டுத்தன்மை கொண்டவர். எவருடனும் ஒத்துப்போகாதவர். தாஸரி நாராயணராவ் மட்டும்தான் அவரிடம் அணுக முடிந்தது. 54 ஆவது வயதிலேயே மறைந்தார்.

நாகேஸ்வரராவின் 200 ஆவது படம் மேகசந்தேஸம்.1982ல் வெளிவந்தது. தாஸரி நாராயணராவ் இயக்கியது. அக்கால இசைத்திரைப்படம். இதன் எல்லா பாடல்களும் அருமையானவை.அஷ்டபதிப்பாடலே இன்னொன்று உள்ளது ‘ராதிகா கிருஷ்ணா ராதிகா’ முற்றிலும் புதிய மெட்டில். இருபாடல்கள் மரபிசைப் பாணியில் அமைந்தவை. ’நவரச சும மாலிகா’ ஒரு அழகான மரபிசைப்பாடல். அழகான இடங்களிலும் எடுக்கப்பட்டுள்ளது. பாலமுரளிகிருஷ்ணா பாடிய ஒரு மரபிசைமேடைப் பாடல் உள்ளது. மெல்லிசை, நாட்டாரிசை என ஆந்திர திரையிசையின் எல்லா வடிவங்களிலும் அழகிய பாடல்கள் உள்ளன. ஆந்திர நாட்டாரிசை சாயல்கொண்ட ’ஆகுலோ ஆகுனை’ எனக்கு மிகப்பிடித்த மெட்டு. குறிப்பாகஅதன் தொடக்கத்தில் வரும் ஹம்மிங்.

எனக்கு இப்பாடல்களுக்கு நிகராகவே பிடித்திருப்பது இதன் காட்சிச்சித்தரிப்பில் உள்ள கோதாவரிக்கரை. பத்தாண்டுகளுக்கு முன் கோதையின் கரையில் ஒருமாதம் தங்கியிருந்தேன். தாளமுடியாத ஏக்கம் கொண்டு நெஞ்சு நெகிழச்செய்யும் நினைவாக அந்நாட்கள் என்னுள் எஞ்சியிருக்கின்றன. நான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையின் முகப்பில் பல .கிலோமீட்டர் அகலத்திற்கு விரிந்து கிடக்கும் கோதாவரி. கரையோரத்து தென்னந்தோப்புகள். நீர்ப்பரப்பின் ஒளியின்மேல் பாய்விரித்துப் பறந்தவை போலச் செல்லும் மீன்பிடிப்படகுகள். ஒருமாதமும் அமர்ந்து வெறுமே நோக்கிக்கொண்டிருந்தேன்.

மேகசந்தேசத்தின் நல்ல பதிப்பு இணையத்தில் உள்ளது எல்லா பாடல்களிலும் கோதாவரி. ஆந்திரத்தின் மிக அழகிய கோயில்களிலும் நதிக்கரையிலும் படம்பிடிக்கப்பட்டுள்ள இப்படத்தின் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கிறேன் நான் இந்தப்படம் இறங்கிய காலத்தில் பார்த்ததில்லை. ஆனால் ஏன் இது இத்தனை கடந்தகால ஏக்கங்களை உருவாக்குகிறது என்று புரியவில்லை

மேகசந்தேசம் அனைத்துப்பாடல்களும்

 

முதல்பாடல்

பாடலாசிரியர் டி. கிருஷ்ண சாஸ்திரி [Devulapalli Krishnasastri]

ஆகுலோ ஆக்குனை பூவுலோ பூவுனை
கொம்மலோ கொம்மனை நுனு லேதரெம்மெனை

ஈ அடவி தாகிபோனா
எத்துலைன இசடனே ஆகிபோனா

கலகல நீ வீசு சிருகாலிலோ கெரட்டமை
ஜலஜல நீ பாரு செல பாடாலோ தேடனை
பகடால சிகுராகு தெரசாட்டு சேடினை
பருவம்பு விதிச்சேடே சின்னாரு சிக்குனை

ஈ அடவி தாகிபோனா
எத்துலைன இசடனே ஆகிபோனா

தருலெக்கி எலனீலி கிரினெக்கி மெலமெல்லா
சகலெக்கி ஜலதம்பு நீலம்பு நிக்குனை
ஆகலா தாகமா சிந்தலா வந்தலா
ஈ கரனி வெர்ரினை எகதமா திருகாடா

ஈ அடவி தாகிபோனா
எத்துலைன இசடனே ஆகிபோனா

இரண்டாம்பாடல்

பாடலாசிரியர் வெட்டூரி சுந்தரராமமூர்த்தி

நின்னடிதாகா சிலனைனா
நீ பதமு சோகினெ கௌதமினைனா
நின்னதிடாகா சிலனைனா
நீ மமதாவேஷபு வெல்லுவலோ
கோதாவரி கங்கனை பொங்குதுவுன்னா

சரசா சராகால சுமராணினி
ஸ்வரசா சங்கீதால சாரங்கினி
முவ்வ முவ்வக்கு முத்து முரிபாலு பலுகா
மவ்வும்பு நடனால மாதங்கினி
கைலாச சிகராத்ர சைலூஷிகாநாட்ய
டோலலுகேவேள ராவேல நன்னைல

நின்னடிதாகா சிலனைனா
நீ பதமு சோகினெ கௌதமினைனா
நின்னதிடாகா சிலனைனா
நீ மமதாவேஷபு வெல்லுவலோ
கோதாவரி கங்கனை பொங்குதுவுன்னா

நின்னே ஆராதிஞ்சு நீ தாசினி
பிரேம ப்ராணாலைன பிரியுராலினி
புவு பூவ்வுகு நவ்வு நவகாலு தெலிபே
சிருநவ்வுலோ நேனு சிரிமல்லினி
ஸ்வ்ப்ன பிரபஞ்சால சௌந்தர்ய தீபாலு
செந்த வெலிகேவெள ஈ சிந்த நீகேல

நின்னடிதாகா  சிலனைனா
நீ பதமு சோகினெ கௌதமினைனா
நின்னதிடாகா சிலனைனா
நீ மமதாவேஷபு வெல்லுவலோ
கோதாவரி கங்கனை பொங்குதுவுன்னா

காச தேசானா ஆஷாட மாசானா

ப்ரியே சாருசீலே

நவரச சும மாலிகா

=================================================================

பழைய கட்டுரைகள்

கிருஷ்ணமதுரம்

என்றுமுள்ள நதி

ராமனின் நாடு

அத்தனையும் பைத்தியங்கள்

மழைக்கோதை

கோதையிடமிருந்து பிரிந்து…

கோதையின் தொட்டிலில்

ஓர் இடம்

கோதையின் மடியில் 4

கோதையின் மடியில் 3

கோதையின் மடியில் 2

கோதையின் மடியில் 1

முந்தைய கட்டுரைமோடியும் முதலையும் -கடிதங்கள்-2
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53