விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபி அவர்களுக்கு…

 

தமிழில் ஒரு புதிய ஆன்மிகத்தைக் கவிதையில் உருவாக்கியவர் என்று அபியைச் சொல்லலாம். மதக்குறியீடுகள் அற்ற, அமைப்புப்பின்புலம் அற்று தனிமனித அகத்துள் மட்டுமே நிகழும் ஆன்மிகம் அது. காலம் -வெளி- வாழ்க்கை என முப்பரிமாணத்தில் தன் அடிப்படைக் கேள்விகளை முன்வைத்து அமையும் கவிதை. அபி அதை மிகச்சில உருவகங்கள் படிமங்கள் வழியாக நிகழ்த்திக்காட்டுகிறர். மிகக்குறைவானவர்களால் வாசிக்கப்பட்டாலும் தமிழின் கவிதைத்தளத்தின் முதன்மைச்சாதனைகளில் ஒன்று அது என்று கருதப்படுகிறது

 

2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது  அபி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அபி அவர்களை நேரில் சந்தித்து மூன்று மாதம் முன்னரே இச்செய்தியை அறிவித்தோம்.

 

அபி விக்கிப்பீடியா பக்கம்

அபி விக்கிப்பீடியா

 

அபி எழுதிய

 

1. மெளனத்தின் நாவுகள். (1974)

2. அந்தர நடை (1978)

3. என்ற ஒன்று (1987)

அபி கவிதைகள் 20013

 

என்னும் நான்கு கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. அபியின் கவிதைகளைப் பற்றி நான் 2000 த்தில் மிக நீண்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். என்னுடைய ‘உள்ளுணர்வின் தடத்தில்’ என்னும் நூலில் அக்கட்டுரை உள்ளது

 

அபி அவர்களுக்கு விருது வழங்கும் விழா டிசம்பர் 29 அன்று கோவையில் நிகழும். நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்

 

*

 

விஷ்ணுபுரம் விருது 2010 ல் நிறுவப்பட்டது. முதல் விருது ஆ.மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ முத்துசாமி. ராஜ் கௌதமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.இது பத்தாவது விருது.

 

ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்

 

 

 

விஷ்ணுபுரம் விருதுகள் இதுவரை

 

விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு

விஷ்ணுபுரம் விருது 2016- பதிவுகள்– வண்ணதாசன்

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39
அடுத்த கட்டுரைநவீன்- எதிர்முகம்