தீர்வுகள் – போகன்

போகன்

தீர்வுகள்!
பிரச்சினைகளுக்குத் தீர்வுகள்!

பாலஸ்தீனப் பிரச்சினை
இலங்கைப் பிரச்சினை
காஷ்மீர்ப் பிரச்சினை.

இஸ்ரேலின் தீர்வு
அமெரிக்காவின் தீர்வு
இந்தியாவின் தீர்வு
பாகிஸ்தானின் தீர்வு
ஐ நாவின் தீர்வு

நேருவின் தீர்வு
இந்திரா காந்தியின் தீர்வு
அமித் ஷாவின் தீர்வு

இந்தியன் எக்ஸ்பிரசின் தீர்வு
நியூயார்க் டைம்ஸின் தீர்வு
தினமலரின் தீர்வு

சமூகப் பிரச்சினை
ஆன்மீகப் பிரச்சினை
வர்க்கப்பிரச்சினை.
இலக்கியப் பிரச்சினை

பெரியாரின் தீர்வு
பெரியவாளின் தீர்வு
காம்ரேடுகளின் தீர்வு
உலமாக்களின் தீர்வு

கவிஞர்களின் தீர்வு
கதை எழுதுபவர்களின் தீர்வு
மொழிபெயர்ப்பாளர்களின் தீர்வு

ஜெயலலிதாவின் தீர்வு
கலைஞரின் தீர்வு
ஸ்டாலினின் தீர்வு
துர்கா ஸ்டாலினின் தீர்வு

தீர்வுகள்!
எதெடுத்தாலும் பத்து ரூபா

முந்தைய கட்டுரைஅபி,விருது -பதிவுகள்
அடுத்த கட்டுரைபக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு