பாரியின் மொழியாக்கக் கதைகள் – கடிதங்கள்

பாரி, புகைப்படம் விஜய் ரங்கநாதன்

 

அன்பின் ஜெ,

 

இறுதியாக மொழியாக்கம் செய்தது யசனாரி கவபத்தாவின் ‘BirthPlace’ எனும் சிறுகதை – பிறப்பிடம்

 

சிறிய கதை, அவரை சரியான வகையில் பிரதிநிதித்துவம் செய்கிறதா எனத் தெரியவில்லை. நான் தேடியவரை இணையத்தில் இவரது சிறுகதைகள் அவ்வளவாக கிடைக்கவில்லை. கிண்டிலில் வாங்கி வாசிக்க வேண்டும். இப்போதைக்கு இக்கதை மட்டும் செய்துள்ளேன்.

 

இத்துடன் பத்து கதைகள். இச்செயலில் பலருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மொழியாக்க அனுபவத்தை இங்கு பதிவிட்டிருக்கிறேன்:

 

இங்கிலாதிருத்தல் – மொழியாக்க அனுபவம்

 

குறிப்பு: நாகரிகத்திலிருந்து தப்பித்தல் கதைக்கு நீங்கள் இணைத்திருந்த ஓவியங்கள் கவனித்தேன். அதுபற்றிய விவரங்களை இங்கு தெரிந்து கொண்டேன். மூன்றுவகை எஸ்கேப்பை குறிக்கும் மூன்றுவகை ஓவியங்கள் (Classical, Reniassance, Cubist). கதைக்கு வழுசேர்க்கும் விதமான அழுத்தமான ஓவியங்கள். நன்றி.

 

பாரி

 

அன்புள்ள ஜெ

 

பாரி மொழியாக்கம் செய்த கதைகளை தொடர்ந்து வாசித்துவந்தேன். அவர் இக்கதைகளைத் தேர்வுசெய்ய என்ன காரணம் என்று சிந்தனைசெய்தேன். இக்கதைகளில் பொதுவாக உள்ள அம்சம் என்பது யதார்த்தத்தை மீறிச்செல்லுதல்தான். நிகழ்ச்சிச் சித்தரிப்பு, அன்றாடச் சித்தரிப்பு ஆகியவற்றிலுள்ள சலிப்பிலிருந்து இக்கதைகளில் தேர்வுகள் உருவாகியிருக்கின்றன என்னும் எண்ணம் ஏற்பட்டது. ஒருவேளை இது இன்றைய இலக்கியப்போக்கின் மனநிலையாக இருக்கலாம். அறிவியல்புனைகதை, தொன்மப்புனைவு என்று எல்லாவகையிலும் கதைகள் அமைந்துள்ளன. கதைகளை சரளமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அவருடைய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

 

எம்.ஸ்ரீனிவாசன்

 

அன்புள்ள ஜெ

 

பாரி மொழியாக்கம் செய்த கதைகள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக சிங்கரின் கதைகள் முக்கியமான ஆன்மிக அனுபவமாக அமைந்தன. அந்த வரிசையில் சேராதவையாகவும் கொஞ்சம் சலிப்பூட்டும் கிண்டலாகவும் இருந்தது ஸ்டீஃபன் லீகாக்கின் அஸ்பெஸ்டாஸ் மனிதன்தான். ஒரு தொடர்ச்சியான இலக்கிய விருந்தாக அமைந்தது இந்த மொழியாக்கம்

 

சரவணன் குமார்

 

’மறுசந்திப்பு’ ஐசக் பாஷவிஸ் சிங்கர்- தமிழாக்கம் டி.ஏ.பாரி

நாகரிகத்திலிருந்து தப்பித்தல்- ஐசக் பாஷவிஸ் சிங்கர்

முட்டாள் கிம்பெல்: ஐசக் பாஷவிஸ் சிங்கர்

நிலவின் தொலைவு – இடாலோ கால்வினோ

அஸ்பெஸ்டாஸ் மனிதன்-ஸ்டீபன் லீகாக்

தக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக்

முழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி

பிரபஞ்ச மெளனம்- டெட் சியாங்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-43
அடுத்த கட்டுரைஎழுத்தாளன்,சாமானியன் -ஆர்.அபிலாஷ்