மறைந்த கனவுகளின் குகை
தொல்விந்தைகள்- கடிதங்கள்
மராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் – பிபு தேவ் மிஸ்ரா
இனிய ஜெயம்
தொல்விந்தைகள் மீதான கடிதங்களையும் இணைப்புகளையும் வாசித்தேன் சுவாரஸ்யம்தான். அறுதி உண்மைக்கு செல்லும்வரை ஏலியன்களை துணைக்கோடுவது நல்லதுதான் ஆனால் அந்த யூகங்கள் இந்தியநிலத்தின் ‘ஷர்லக் ஹோம்சுகள்’ கையில் சிக்கும்போது என்ன விளைவுகள் நேரும் என்பதை யூ ட்யுப் இல் சில விடியோக்கள் வழியே அறிய முடிகிறது. எல்லோரா ஏலியன் டெக்னாலஜி அளித்தமை கொண்டே ‘குடையப்’ பட்டிருக்கிறது என்கிறது ஒரு ஆய்வாளரின் வீடியோ. நான் கண்ட மற்றொரு காணொளி குடிமல்லம் வேட சிவன் ராக்கெட்டில் வந்திறங்கிய ஏலியன் என பல்வேறு தரவுகள் வழியே நிறுவுகிறது.
https://www.youtube.com/watch?v=OsfZI-tZw9c
சிறிய பயணம் ஒன்றில் இருக்கிறேன். நண்பர் வாயிலாக கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தின் புகைப்படம் [ஆகாய வெளியில் நேர் செங்குத்தாக நின்று எடுக்கப்பட்டது] ஒன்றைக் கண்டேன். விமானம் வடிவத்தால் துல்லியமான சக்கர யந்திரம் ஒன்றின் வடிவம். செப்புத் தகட்டில் சட்டம் அடித்து வைக்கப்பட்ட பிரும்மாண்ட யந்திர வடிவம். இத்தனை துல்லியம் மனித எத்தனத்தில் சாத்தியம் என்பதை நம்பவே இயலவில்லை.
இந்தக் கோவில் நெடு வருடங்கள் முன்பு ‘வரலாற்று ஆய்வின்’ கண்ணில் விழாத போது என்னவாக இருந்திருக்கும்? அங்கே உள்ள விவசாயியோ இடையரையோ அந்த பிரும்மாண்ட கோவில் தலைமுறை தலைமுறையாக அங்கே இருக்கிறது உபரியாக எதோ பூதம் அதை கட்டியது எனும் கதையையும் சொல்வார்.
இன்று தொழில்நுட்பம் கைவசப்பட்ட நிலையில், அந்தக்கால தொழில் நுட்பம் என்னவாக இருந்திருக்கும் என யூகிக்கவே முடியாத நிலையில் இந்த கற்பனைக்கும் சிக்காத துல்லிய வடிவழகை வானத்திலிருந்து கண்டால் இயல்பாகவே ஏலியன்ஸ் பக்கம்தான் யூகம் செல்லும். இந்த பிரும்மாண்ட பிரபஞ்சம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல ஓரத்தில் எங்கோ நாலைந்து கிரகத்தில் ஏலியன்களும் இருக்கலாம். ஆனால் இவற்றுக்கும் ஏலியன்கள் வருகைக்கும் இணைப்பு கொடுப்பதற்கு முன், மானுடம் இன்னும் புகுந்து புறப்பட்டுப்பார்க்காத ஒரு வெளி இன்னும் இங்கே இருக்கிறது. மானுடம் தனது தியான நிலையில் திறக்க வேண்டிய வெளி அது. அறிவு சற்றே ஓய்வு கொள்ள அறிதல் இயங்கும் வெளி. :)
கடலூர் சீனு
கற்காலத்து மழை-8
கற்காலத்து மழை-7
கற்காலத்து மழை-6
கற்காலத்து மழை-5
கற்காலத்து மழை-4
கற்காலத்து மழை-3
கற்காலத்து மழை-2
கற்காலத்து மழை -1