அசோகமித்திரனின் ’காந்தி’ நான் விரும்பும் கதைகளில் ஒன்று. சொல்லப்போனால் அது கதையே அல்ல, எண்ணங்களின் பிரவாகம் மட்டும்தான். சிந்தனை அல்ல. உணர்ச்சிகள் சொற்களாக மாறும் ஒரு நிலை. ஆனால் அந்த உணர்ச்சிப்பெருக்கில் உள்ள நுண்ணிய அந்தரங்கத்தன்மையும் வேகமும் அதை தமிழின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாக ஆக்குகிறது