நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம்
கங்கைக்கான போர் -கடிதம்
நீர் நெருப்பு – ஒரு பயணம்
டமருகம் இசைப்பள்ளி துவக்கவிழா
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்றைய காந்திகள் என்ற தலைப்பில் பாலா எழுதிய நூல் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் புத்தகத்தின் இறுதி வடிவத்தை அளிப்பதாக பாலா கூறியிருக்கிறார்கள்.மிகவிரைவில் புத்தகத்தை தயார் செய்தற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறோம். உரையாடும் காந்தி புத்தகமும் தன் மீட்சி புத்தகமும் வாசர்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்றுள்ளது .மேலும் பல நல்ல மன மாறுதல்களை உருவாகியுள்ளது.
மிகக்குறிப்பாக தன்மீட்சி புத்தகம் இளைய தலைமுறையினரிடம் நல்லதிர்வை வழிகாட்டுத்துளை உருவாக்கியுள்ளது.எனவே தன்மீட்சி எனும் தளத்தில் உங்களின் ஒரு உரையாடல் நிகழ்வு ஒன்று நடத்த திட்டமிடுகிறோம். உங்களின் மேலான அனுமதியும் அதை குறித்த வழிகாட்டுதலும் கேட்கிறோம். அதன் பிறகுமிக விரைவில் இடமும் தேதியும் தேர்வு பண்ணி சொல்கிறோம்.அன்று கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அம்மாவின் கத்தியின்றி ரத்தமின்றி புத்தக வெளியீடும் அந்த நன்நாளில் நடக்கும் என மகிழ்வுடன் பகிர்கிறோம்.
உங்களின் தொடர் பயணங்கள் எங்கள் அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கையும் மன விரிவையும் அளிக்கிறது.அதன் நீட்சியாக Economy of Happiness எனப்படும் ஒரு உலகளாவிய நண்பர்களின் சந்திப்புக்கு நாங்கள் நண்பர்கள் லடாக் (செப்டம்பர் 18-23வரை) செல்ல இருக்கிறோம். உலகம் முழுவதும் இருந்து உலகமயமாக்கலுக்கு மாற்றாக உள்ளுர்மயமாக்கல் பணியில் ஈடுபட்டு வரும் நண்பர்களின் வருடாந்திர கூட்டம் இது.நான்கு ஆண்டுகள் முன்னர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு எங்கள் வாழ்வில் மகத்தான மாறுதல்களை நிகழ்த்தியுள்ளது.பலதரப்பட்ட அனுபவபகிர்தல்களும் அறிவு பரிமாற்றமும் நடைபெறும் தளம் இது.மிகச்சிறிய நாடுகள் தொடங்கி மிகப்பெரும் நாடுகளின் மக்கள் திரள் வந்து கலந்து கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் திரும்புவார்கள்.
ஹரித்துவார் சென்று திரும்பிய பிறகு தொடர்ந்து நீர் குறித்தும் அதன் தன்மை குறித்தும் அதை குழந்தைகளுக்கு கைமாற்றி கொடுப்பதற்கான செயல்களை திட்டமிட்டு செய்தோம்.அது ஆகப்பெரிய மனவிரிவை அளித்துள்ளது.குக்கூ காட்டுப்பள்ளி அருகே உள்ள புலியானுர் கிராமத்தின் ஊர் கிணற்றினை தூர் வாரும் பணியினை உள்ளூர் மக்களுடன் இணைந்து துவக்கயிருக்கிறோம்.மேலும் இது போன்ற பழமையான பயன்பாட்டில் இல்லாத இரு கிணறுகளை தூய்மை படுத்த திட்டமிட்டு உள்ளோம்.இந்த மாதம் முழுவதும் தண்ணீரின் மன்னிப்பு என்ற பெயரில் குழந்தைகளுக்கான நிகழ்வினை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.
அது போன்று இந்த லடாக் பயணம் உலக அமைதிக்கான கல்வி குறித்த பயணமாகவும் அதை உருவாக்குவதற்கான செயல்திட்டமாகவும் இதை நாங்கள் உருவாக்கி வருகிறோம். உங்களின் மேலான அன்பும் அரவணைப்பும் வழிகாட்டுதலும் எங்களுக்கு வேண்டும்.
ஸ்டாலின் கள்ளிப்பட்டி