அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா

அபி கவிதைகள் 150

அபி கவிதைகள் அழியாசுடர்கள்

அபி விக்கிப்பீடியா

 

முரண்களின் நடனம்:

 

நெடுங்கால நிசப்தம்
படீரென வெடித்துச் சிதறியது
கிளைகளில் உறங்கிய
புழுத்தின்னிப் பறவைகள்
அலறியடித்து
அகாத வெளிகளில்
பறந்தோடின
தத்தம் வறட்டு வார்த்தைகளை
அலகுகளால் கிழித்துக் கொண்டே
அபி

 

முரண்கள். அது இல்லாத வெளியேயில்லை. மூளைஇதயம், இருள்வெளிச்சம் , நினைவுமறதி, நன்மைதீமை, இருப்புஇன்மை என அங்குலம் அங்குலமாய் இவ்வுலகம் முழுவதுமே நேர்த்தியாக முரண்களால் அழகுற நெய்யப்பட்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால் இது ஒரு மகத்தான தொகுப்பு. எண்ணிறந்த எல்லைக்கோடுகளின் உயிர்வெளி.
ஒன்றைத் தொட்டால் இன்னொன்று எங்கோ சரிந்துவிடும் அல்லது திரிந்துவிடும். ஒன்றில்லாமல் இன்னொன்றிற்கு இயக்கம் கிடையாது.. மேற்கண்ட அபியின் கவிதையிலும் ஒரு முரண் தொழிற்படுகிறது. வழக்கமான காட்சிதான். வெடிச்சப்தம் கேட்டு பறவைகள் தெறித்துப் பறப்பது. ஆனால் இங்கு வெடித்துச்சிதறுவது நிசப்தம். அது உண்டாக்குகிற சப்தத்திற்கு பறவைகள் பறக்கின்றன

 


நிசப்தம் வெடித்துச் சிதறுமா ? அது ஒரு பொருளா எண்ணமா? இந்த அனுபவம் நடப்பது பொருள்வெளியிலா இல்லை எண்ணவெளியிலா ? வெடித்துச் சிதறும் நிசப்தம் சப்தத்தைதான் உண்டுபண்ணுமா ? என அடுக்கடுக்காக இக்கவிதையை விரித்தெடுத்துக்கொண்டே செல்லலாம். மேலும் வாசகனின் தர்க்கத்தின் மீது எழுதப்பட்டு அங்கிருந்து தகித்து ஆவியாகி நனவு மனதோடு மோதுவது போன்ற ஒரு அனுபவம்

வி.என்.சூர்யா


மேற்கண்ட அபியின் கவிதையோடு இணையாக வைத்து வாசிக்கத்தக்க இன்னொரு கவிதையை சுட்டுவதோடு இக்குறிப்பை முடித்துக்கொள்கிறேன்..

 

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்


தேவதச்சன்

 

வி.என்.சூரியா

[முகநூலில்]

 

அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்

அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3

கவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

முந்தைய கட்டுரைவைகுண்டம் அவர்களுக்கு பதில்
அடுத்த கட்டுரைகண்டு நிறைவது