ஐந்தாவது கொலை !!!!!

ஐந்தாவது கொலை !!!!!
————————————— இளையராஜா

துப்பறியும் சாம்பு சுந்துவிடம் ‘ஜெயமோகன் மாமாவுக்கு வணக்கம் சொல்லு’ என்றார்.

சுந்து ஜெயமோகனிடம் ‘வணக்கம் மாமா! ஆனா நீங்க நல்லவரா கெட்டவரா ?’ என்றது.

ஜெயமோகன் பதபதைப்புடன் ‘தெரியலப்பா’ என்றார்

‘அப்ப நீ எனக்கு கமர்கட், கல்லக்கா, வாழைப்பழம் எல்லாம் வாங்கி கொடு !’

‘ஏம்பா ?’

‘உனக்கு தெரியாததுக்கு பைன் போட்டுட்டேன்.!’

****************

‘ வெல் ! வெல்! வெல்! மை டியர் வாட்சன் ! நான் ஒரு உண்மையை சொன்னால் நீங்கள் நம்புவீர்களா ?’

‘மிஸ்டர் ஹோம்ஸ் !கிருஸ்துவே ! நீங்களா…நீங்களா கொலைகாரர்???
என்னையும் கொன்று விடாதீர் ! கொன்று விடாதீர் !’

‘ வாட்சன் ! பதற்றபடாதீர்கள் ! தயை கூர்ந்து நீங்கள் உங்களதை அள்ளிக்கொண்டு அமைதி ஆகுங்கள். நாம் பிரிட்டிஷ் காரர்கள். நமது மரபுப்படி ஆர்கசத்தின் அறிகுறியை கூட முகத்தில் காட்டாமல்
அனுபவிக்க பழகி கொள்ள வேண்டும். நான் சொல்ல வந்தது உலகத்தின் இப்பகுதியிலும் எழுத்தாளர்கள் உண்டு என்பதை.’

‘நீங்கள் அப்படி சொல்லத் துணிந்ததை நான் அறிய விரும்புகிறேன்.
மிஸ்டர் ஹோம்ஸ் !’

`அங்கே அந்தக் குழந்தைக்கு கமர்கட், கடலைக்காய், வாழைப்பழம் எல்லாம் வாங்கி தருகிறாரே, அவர் ஒரு எழுத்தாளர். ‘

‘எப்படிக் கண்டு பிடித்தீர்கள் ? மிஸ்டர் ஹோம்ஸ் !’

‘எலிமெண்டரி வாட்சன் ! அவரது முழங்கை, வலது நடுமுன்கைதசை , மணிக்கட்டு, விரல் பகுதிகளை கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவை மேசையின் மீது அதிகம் பயன்படுத்தப்பட்டு இருப்பதற்கான தடயங்களை கண்டீர்களா ?’

‘இப்பொழுது மடிக்கணினி அதிகம் பயன்படுத்துவதனால் சீராக நகங்கள் வெட்டப்பட்ட அவர் விரல்கள் சில மைக்ரான்கள் உள்ளே சென்றுள்ளன.கட்டைவிரல்கள் பக்கவாட்டிலும்…மற்ற விரல்கள்
நீளவாட்டிலும்…!’

‘அபாரம் வாட்சன் ! நீங்கள் என் மனதை மிக நுட்பமாகப் பின் தொடர்கிறீர்கள் ! ‘

`இவர் நமது பிதாமகர் டாயலைப் போல் எழுதகூடியவரா ?’

‘பிரிட்டிஷ் மரபு அனுமதித்தால் உங்களை ‘எலிமெண்டரி ஸ்கூலு பையா!’ என்று வசை பாட விரும்புவேன். டாயல் எழுத்து இங்குள்ள ஸ்கூல் பையன்கள் எழுகூடியது. இது வேறு வகை. எழுத்தின் வழியாக எழுத்தில் இல்லாததை எப்போதும் எழுத்து ஆகமுடியாததை எழுத முனைவது.’ என்று சொல்லி ஆச்சரியப்பட்டு, ஒரு கணம் கண்களை மூடி மோனத்திழாந்து மேல் நோக்கி சுருள் சுருளாக ‘பைப்’ புகையை விட்டார்.

‘பிரிட்டிஷ் மரபு அனுமதித்தால் உங்களை ‘ஷெர்லாக்கு டப்பா’ என்று வசை பாட துணிவேன். மேலும் நமது மரபு அனுமதித்தால் இவர்களை போன்றவர்களை அங்கீகரித்து மகிழலாம்.’

தூரத்தில் இருந்து ‘மொதல்ல அதுக்கு தமிழ் மரபு அனுமதிக்கணும்டா வெள்ளை கோங்குகளா !’ என்று கடுப்பான குரல்
கேட்டது.

************

கணேஷ், ‘மிஸ்டர் புரசை பாண்ட் அகா மிஸ்டர் சங்கர்லால் ! இவர் ஜெயமோகன். ஜெயமோகன் ! இவர் மிஸ்டர் சங்கர்லால் அகா மிஸ்டர் புரசை பாண்ட்’. என்று அறிமுகம் செய்தார்.

ஜெயமோகன் ‘இதில் மிஸ்டர் யார் ?…அக்கா யார் ?.. புரசை யார் ? ஜேம்ஸ் பாண்ட் எங்கே ?… சங்கர்லால் யார் ? ………’ என்று குழம்பி வசந்த்தைப் பரிதாபமாகப் பார்க்க….

‘சார் ! இது பூ-புஷ்பம்-புய்ப்பம்-கவன்டமணி-செந்தில் லாஜிக் சார் ! பூவ பூவுன்னும் சொல்லலாம்…புஷ்பமுன்னும் சொல்லலாம்..செந்தில் சொன்ன மாதிரியும் சொல்லலாம்…இல்லையா..? என்ன புரியலையா? ரோஸ் ஸ் எ ரோஸ் ஸ் எ ரோஸ் ன்னு சொல்வாங்களே…அட…என்ன சார் ! ரோஜா கூட எந்த ரோல்ல நடிச்சாலும் ஒரே மாதிரி நடிபாங்களே..! இப்ப புரிஞ்சதா…அந்த மாதிரி மிஸ்டர் சங்கர்லாலை ..!!!

‘ பாய்ஸ் ! பாய்ஸ் ! இப் யூ டோன்ட் மைன்ட் ….மிஸ்டர் ஜெயமோகன் ! உங்களை சந்தித்ததில் எனது கருப்பு ஷூவும் பான்ட், ஷர்ட், கோட்டும், ராடோ வாட்சும், கருப்பு ரெய்பேன் கண்ணாடியும், பட்டானிக்கடலை துப்பறி ஒலி பெருக்கியும், தொப்பியும் மற்றும் நானும் மிக்க மகிழ்கிறோம்..’ என்று சங்கர்லால் கையை நீட்ட ஜெயமோகன் புன்னகைத்து கைகுலுக்கினார்.

கொலையாளி யார் என்று கண்டுபிடித்து அதன்பின் அந்த கொலையாளியை முதன்முறை நேரில் காணும் துப்பறி நிபுணர் மட்டுமே உதிர்க்க சாத்தியமான மர்ம புன்னகையை ஜெயமோகனைப் பார்த்து உதிர்த்து, ‘ இருய்யா ..இரு.. என்னையவே நக்கல் பண்ணி எழுதிறியா …! இப்பதாண்டி என் தல…பாண்டு … ஆல்ப்ஸ் மலையில் அம்லேட் போட்டு அமுக்கிட்டு இங்கே ஒரு மணி முன்னர் வந்ததாக தகவல்….தல உன்ன கைமா பன்ன வர்றார் டியோவ்வ்வ்……’ என்ற சங்கர்லாலின் ‘மைன்ட் வாய்ஸ்’ அந்த வட்டராத்துக்கே கேட்டது.

‘யோவ்… சங்கரு …மொதல்ல உன் மைன்ட் வாய்ஸ நிறுத்து யா…இதுல கொஞ்சம் பாரு !..’ என்று கணேஷ் கொசுவர்த்தி சுருளை சங்கர்லால் முகத்தின் முன் சுற்றினார்.

‘ கொசு அதிகமா இருந்ததானே இது போல் ‘அக்டிவ் மோடில்’ சுற்ற வேண்டும் …! இப்போது ‘நார்மல் மோடே’ போதுமே..!’ என்றார் சங்கர்லால்.

‘ யோவ் …லாலு … இது பிளாஷ் பேக் யா !..சீக்கிரம் உள்ள போ.. இந்த சுருள இப்பிடி வேகமா சுத்தினா…கண்ண கட்டி ஒரு மாதிரி மயக்கமா வரும் ..அப்ப இங்குள்ள சுழல் மங்கலாகி புது காட்சி தெளிவாக தெரியும்….

‘ ஒன்றும் தெரியவில்லையே …!’

கணேஷ் தன் சுட்டு விரலை எண் ஏழாக்கி நல்ல பாம்பு போல சங்கர் லாலின் உச்சி மண்டையில் ‘ண்நங்’ என்று ஒரு போடு போட்டு ‘ இப்ப தெரியுதா ..? ‘ என்றார்.

சங்கர்லால் கண்கள் கட்ட சுருளுக்குள் நுழைந்தார். அங்கே …..

‘பாண்ட்-மை நேம் ஸ் ஜேம்ஸ் பாண்டுக்கும் , ஜெயமோகன் அவரது பாப்பா பையன் அவரது வீட்டு மற்றும் தெரு நாய்களுக்கும் நடந்த உரையாடல்களையும், ஜேம்ஸ் பாண்ட் தனது பேன்ட் கிழிய பார்வதிபுரம் தெருவில் இருந்து ஓடி வருவதையும்…..’ தெளிவாகக் கண்டார்.

சங்கர்லால் திகைத்து ஒரு நொடி தரையில் உட்கார்ந்து மீண்டும் எழுந்த போது தூய்மையான வெள்ளை வேட்டி சட்டை நெற்றில் விபூதி சகிதமாக மாறி இருந்தார்.

ஜெயமோகன் திகைத்து ‘ கணேஷ் ! இவர் எப்படி ஒருநொடியில் குளித்து உடை மாற்றி கோயிலுக்கு சென்றுவிட்டு வந்தார் ?… என்று கேட்க

‘பாஸு..சும்மா இருங்க…பாஸு… வெவரம் புரியாம….சங்கர்லால் திருந்திட்டாரு…பாஸூ…இனிமேல் ஜென்மத்துக்கும் துப்பறிய மாட்டார்….’

சங்கர்லால் ஜெயமோகனிடம் ,’ நீங்க நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கணும்’ என்று சொல்லிவிட்டு தள்ளாடி தள்ளாடி நடந்து எட்டடி சென்றபின் தடுக்கி தலை குப்புற விழுந்து மூன்று முறை குட்டி கரணமிட்டு மீண்டும் எழுந்து தள்ளாடி தள்ளாடி நடந்து மீண்டும்
……………………………………………………………சென்றார்.

************

சுஷீலா ‘வி ஆர் ட்வின்ஸ்’ என்ற வாசகமிட்ட டி-ஷர்ட் (அந்த டி- ஷர்ட் அவளது மார்பக (கன)அளவை மட்டும் துல்லியமாக காட்டி, அந்தரங்க அழகை லாவகமாக மறைத்து இருந்தது.) மற்றும் பரத் நீல நிற ஜீன்ஸ், கருப்பு கூலிங் கிளாஸ் சகிதமாக வந்து இறங்கிய போதே, சுஷீலா ஜெயமோகனை கண்டு விட்டாள்.

‘ வாவ் ! ரைட்டர் ஜெமோ. ஹீ இஸ் எ ஜீனியஸ் ! ‘ என்று துள்ளி துள்ளி குதித்தாள். அப்போது அவளது மார்பகங்கள் மேல் கீழ் இட வல மற்றும் வட்டமிட்டு குலுங்கியதை, பரத்தின் துப்பறியும் கண்கள் கண்டு மகிழ்ந்தாலும், சற்று கோபத்துடன்,

` என்ன பெரிய ஜீனியஸ் ! என்னை விடவா ? இனி மேல் உன்னோட சேந்து துப்பறிய மாட்டேன் போ !’ என்று பரத் குழந்தையானான்.

‘ டேய் ! கண்ணா ! துப்பறியரதுல நீதாண்டா ஜீனியஸ் ! இவர் வேற டிபார்ட்மென்ட். பி எஸ் என் எல் !’ என்று சுஷீ பரத்தை சமாதனம் செய்ய முற்பட்டு தோற்று அழ தொடங்கினாள்.

‘ ஓகே ! ஓகே ! அழாதே ! ஐ ஹவ் என் ஐடியா. நீயும் நானும் இன்றிரவு உன் படுக்கையில் படுத்துக்கொண்டு உன் மீது ‘விஷ்ணுபுரம்’ என்ற உன் ஜீனியஸ் எழுதிய புத்தகத்தை வைத்து சேர்ந்து வாசிக்கலாம்.’

‘ ஓ..ரியலி… வித் மை ப்ளஷர்’ என்றாள் சுஷீ.

‘ பட். ஆன் ஒன் கண்டிஷன்.’

‘ என்ன ? ‘

‘நேக்கிடா!’

‘ ஏன் ? ‘

‘ பார் மை ப்ளஷர்….. !’ என்று கண்ணடித்தான் பரத்.

‘ச்சிய்ய் ! ‘ என்று சுஷீ முகம் சிவந்து வெட்கி சிரித்து ஜெயமோகனை நோக்கி ஓடினாள்.

பரத் அவளது ஓடும் பின்னழகை பார்த்து ‘ ஜீனியஸ்களை பார்த்தாலே சில பெண்களுக்கு வர்ற மொழங்கால் வீக்னஸ் இது’ என்று நினைத்து பெரு மூச்சிவிட்டு கொண்டே அடுத்த நடக்காத கொலையைப் பற்றி துப்பறிய தொடங்கினான்.

***************

சுஷீலா ஜெயமோகனை நெருங்குவதற்குள் கோபாலன் பாய்ந்து வந்து ஜெயமோகனை ஆரத்தழுவி தட்டாமாலை சுற்றி, ‘ ஜெயமோகன் சார் ! மேதாவி சார் நீங்க ! எப்பிடிதான் இப்புடி யோசிக்கிறீங்களோ ? எழுதுறீங்களோ ? ‘ நீங்க எழுத்தில ஒரு துப்பறியும் சாம்பு சார் !’

‘ ஷாம்ப், சோப்பெல்லாம் ஒன்னும் இல்லை. கோபாலன் ! இந்த மாதிரி எழுதறது இலக்கியத்தில் ஒரு வகை. இதை பாரடி என்கிறார்கள். ‘ஜோக்கா எழுதுறது கேக்வாக்கல்ல’ என்று சுந்தர ராமசாமி கூட அடிக்கடி சொல்லுவார். இது எல்லோரும் சிரித்து மகிழ்வதற்காக எழுதறது. தமிழ் மரபில் ‘ சிரித்து சிரித்து சிறத்தல்’ ன்னு சொல்லி இருக்காங்க. ஆனா நான் பாரடி எழுதினால் ஏன் சில பேர் அதை படித்துவிட்டு சீரியஸ் ஆகிறார்கள் என்பதை மட்டும் என்னால் புரிஞ்சிக்க முடியல. ஏன்ன…சீரியஸாக…. இலக்கியத்தில் வேறு ஒரு எழுத்து வகை உண்டு. உதரணமா…கோபாலன் ! நீங்க விஷ்ணுபுரத்தை எடுத்துகிட்டீங்கனா…………….

கோபாலன் பதறி ‘ ஜெயமோகன் சார் ! இப்பிடி கொத்து கொத்தா வண்டி வண்டியா க்ளூவ தராதீங்க. நான் சோட்டா துப்பறி நிபுணன். திக்கு..முக்கிருவேன்…. மொதல்ல நீங்க கொடுத்த மூணு க்ளூவ மட்டும் எடுத்துக்கிறேன். சோக்கு ! கேக்கு ! வாக்கு !’

கோபாலன் ‘சோக்கு ! கேக்கு ! வாக்கு’ என்று மோட்டுவளையை பார்த்து மேவாயைதடவி கொண்டே சொல்லிபார்த்து ஒரு நொடி கண்களை மூடி திறந்து முகம் மலர்ந்து மீண்டும் ஒருமுறை ஜெயமோகனை ஆரத்தழுவி தட்டாமாலை சுற்றி, ‘ ஜெயமோகன் சார் ! மேதாவி சார் நீங்க !’ என்று சொல்லி அந்த கணத்திலிருந்தே துப்பறிய தொடங்கினார்.

*******************

அந்த இடமே அல்லோல கல்லோலப் பட்டு கொண்டு இருந்தது. அனைத்து உள்நாட்டு துப்பறி நிபுணர்களும் ஜெயமோகனை சூழ்ந்து தம் தம் துப்பறியும் சக்திகளுகேற்ப புகழாரம் சூட்டி கொண்டு இருந்தனர்.

அருகிலோ ஒரே களேபரம். வெளிநாட்டு நிபுணர்கள் ( இரும்பு கை மாயாவி, ஸ்பைடர் மேன், பேட் மேன், பாண்ட்-மை நேம் இஸ் ஜேம்ஸ் பாண்ட் உட்பட ) ‘ பான்ட் ஜிப்பில் குஞ்சா மணி சிக்கின பையன் போல’ துடி துடித்து கொண்டு இருந்தனர்.

ஜெயமோகன் அதற்குள் வேறு ஒரு காலவெளிக்குள் சென்று விட்டு இருந்தார். அங்கு முகங்களோ, சிட்டுகுருவிகளோ, செடி கொடி மரங்களோ இல்லை. ஏன்….அங்கு திசைகளே கூட இல்லை.

**************
அன்புடன்,
இளையராஜா.

முந்தைய கட்டுரைஅசோகமித்திரனின் காந்தி
அடுத்த கட்டுரைநிர்மால்யாவுக்கு விருது