குர்ரதுலைன் ஹைதர், எழுத்தாளர்கள்,கோவை

அன்புள்ள ஜெ.,

கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாம் கூடுகை வரும் ஞாயிறு, ஜூலை 28 அன்று காலை 10.30 மணிக்கு கூடவிருக்கிறது. குர்அதுல்ஹைன் ஹைதர் எழுதிய அக்னி நதி நாவலின் மீதான கலந்துரையாடல் நிகழும்.

கோவையில் புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இவ்விழாவின் ஒரு அங்கமாக இந்த கூடுகையை கோவை கொடீசியா வளாகத்திலேயே அமைக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். நிகழ்வில் கொடீசியா நண்பர்களும் கோவையின் முக்கிய மனிதர்களும் கலந்துக் கொள்வார்கள்.

இந்த ஆண்டின் புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வண்ணநிலவனுக்கு   அளிக்கப்பட்டது. நாஞ்சிலும் வண்ணதாசனும் பார்வையாளர்களுடன் அரங்கில் வீற்றிருக்க மேடையில் கலாப்ரியாவின் வாழ்த்துரையுடன் வண்ணநிலவன் விருதினை ஏற்றுக் கொண்டார்.

விழா நேர்த்தியாக நடந்தேறி முடிந்தவுடன் எழுத்தாளர்கள் அனைவரும் மேடையேறி ஒன்று கூடினர். அரங்கம் ஒரு மின்னற்வெட்டில் உறைந்து பின் பரபரத்துக் கொண்டது. அந்நொடி தன்னை காலத்துள் உள்ளிழுத்து பின் அம்பின்  விசையுடன் முன் சென்றதைப் போல மக்கள் முன் ஓடி இப்புகைப்படத்தை அள்ளிக் கொண்டனர். விழாவின் உச்ச கணமாக இப்படம் அமைந்துவிட்டது.

நரேன்

முந்தைய கட்டுரைஇன்றைய காந்திகள், லடாக்- கடிதம்
அடுத்த கட்டுரைஅபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்