இவர் பிரவீன் மோகன், ஆங்கில பாரிசாலன் மற்றும் ஹீலர் பாஸ்கர்.
இந்த காணொளியின் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஒரு இந்தியனாக தமிழனாக நிறைவாக உணர்ந்தேன்.
அரைவேக்காடுகளும் மந்த புத்திக்காரர்களும் நனைந்து நமுத்துப்போன சாம்பிராணிகளும் உலகெங்கிலும் இதே அளவு உள்ளனர், குறிப்பாக மேற்குலக நாடுகளில்.
பிரவீன் ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்தால் அவரின் அறியாமையை உலகெங்கும் யூ டியூப் மூலமாக கடை விரிக்கிறார் என்று தோன்றும், ஆனால் நிகழ்ந்தது வேறு. அவரின் அறிவுச்செல்வத்தை உலகெங்கிலுமிருந்து பாராட்டி வருகின்றனர்.
நமது “அன்றே” நிகழ்த்திய சாதனைகள் பல பல. சீனா டூப்ளிகேட் பொருட்களை உருவாக்கி உலகை வென்று கொண்டிருக்கிறது. நாம் டூப்ளிகேட் சிந்தனைகளை உருவாக்கி இந்த ஜகத்தினை ஜெயித்திடுவோம்
கிருஷ்ணன்